To
All Examination Centres Headmasters / Matriculation School Principals
Download the instructions regarding steps to be taken at examination centres.
CEO VELLORE.
Examns. Instns
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
13-02-2019 முதல் நடைபெற்று வரும் மேல்நிலை முதலாமாண்டு செய்முறைத் தேர்வுகள் முடியும் நாள் அன்று அல்லது தேர்வு முடிவுற்ற நாளுக்கு மறுநாள் காலை 11.00 மணிக்கு செய்முறைத் தேர்வுகள் சார்பான மதிப்பெண் பட்டியல் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கட்டாயம் ஒப்படைக்கப்பட வேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வுகள் சார்பான தேர்வு மைய பெயர்பட்டியல், வருகைத்தாள் மற்றும் இருக்கைத் திட்டம் அரசு தேர்வுகள்
( dge.tn.gov.in ) இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. மேலும் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
இயக்குநரின் கடித நகல்
HS Second Year Mar April 2019 Seating Plan Downloading HS1 _1_(1)
பெறுநர்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்
சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்
மேல்நிலை இரண்டாம் ஆண்டு பிப்ரவரி 2019 செய்முறைத்தேர்வுகள் முடிந்தநிலையில் கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் செய்முறைத் தேர்வு மதிப்பெண்பட்டியல் ஒப்படைக்கப்படாமல் உள்ளனர். 15-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் மேல்நிலை இரண்டாமாண்டு செய்முறைத் தேர்வு மதிப்பெண் பட்டியல்கள் மற்றும் அது சார்பான ஆவணங்கள் காட்பாடி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உடன் ஒப்படைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
மேலும் நாளை காலை (15-02-2019 அன்று காலை 10.00க்குள் ) மதிப்பெண் பட்டியல்கள் ஒப்படைக்கப்படாத பள்ளி தலைமை ஆசிரியர்கள் இது சார்பாக எழும் புகார்களுக்கு முழுப் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும்என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
மதிப்பெண் பட்டியல் ஒப்படைக்கப்படாத பள்ளிகளின் விவரம்
1. ஊரிஸ் மேல்நிலைப் பள்ளி, வேலுர்
2. தக்கோலம் மகளிர்
3. ஒடுக்கத்
அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டிற்கான பெயர் பட்டியல் அனைத்து தேர்வு மையங்களிலும் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் விடைத்தாளுடன் உடனடியாக இணைக்கப்படல் வேண்டும். மேலும் கீழ்க்குறிப்பிட்டள்ள அறிவுரைகளை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மேல்நிலைப் பள்ளி தேர்வு மைய தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
1. தங்கள் தேர்வு மையத்தில் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலில் உள்ள மாணவர்களின் முகப்புத்தாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவேண்டும்.
2. தங்கள் தேர்வு மைய பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று முகப்புத்தாட்கள் பெறப்படவில்லை என்றால் பெயர் பட்டியலில் விவரம் குறிப்ப
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெறவுள்ள மேல்நிலை பொதுத் தேர்வு புவியியல் பாட முதன்மைக் விடைத்தாளுடன் உலக வரைப்படம் இணைத்தல் சார்பாக இத்துடன் இணைக்கப்பட்டுள்ள சென்னை அரசுத் தேர்வுகளின் இயக்குநரின் கடிதத்தில் தெரிவித்துள்ளபடி செயல்படுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இணைப்பு
Main Sheet Instructions - Geography
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் முகப்புத்தாட்கள் வேலுர் அரசுத் தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து வழங்கப்பட்டுவருகிறது. தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்கள் பள்ளிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட மாணவர்களின் முகப்புத்தாள் சரியாக உள்ளனவா என உறுதி செய்துக்கொள்ளுமாறுகேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் பெயர் பட்டியலில் மாணவனின் பெயர் இடம் பெற்று தற்போது வரை முகப்புத்தாள் பெறப்படவில்லை எனில் அதன் முழு விவரத்தினை வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் சார்ந்த பெயர் பட்டியலின் நகலில் முகப்புத்தாள் பெறப்படாத மாணவனின் பதிவு என்னை சிகப்பு மையால் குறிப்பிட்டு உடன் ஒப்படைக்குமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் ப
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மேல்நிலை முதலாமாண்டு தொழிற் கல்வி பாடங்கள் மற்றும் இதர பாடங்களுக்கான செய்முறைத் தேர்வு மந்தன கடிதங்களை சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலகத்தில் 13-02-2019 அன்று பெற்றுக் கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர் பட்டியல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்திலிருந்து 11-02-2019 முதல் 12-02-2019 வரை நாட்களில் இரவு 8.00 மணி முதல் காலை 10.00 மணி வரையிலான நேரத்தில் மட்டும் அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் தங்கள் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி மேல்நிலை முதலாமாண்டு மாணாக்கரின் பெயர் பட்டியல் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். திருத்தங்கள் ஏதுமிருப்பின் அதன் விவரத்தினை 12-02-2019 மாலை 03.00 க்குள் வேலுர் மாவட்டமுதன்மைக் கல்வி அலுவலக பி 5 பிரிவு எழுத்தரிடம் நேரில் ஒப்படைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டு
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019 மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் 11-02-2019 அன்று இரவு 8.00 மணி முதல் 12-02-2019 அன்று காலை 10.00 மணிக்குள் அரசுத் தேர்வுகள் இயக்கக இணையதளத்தில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட User ID மற்றும் கடவுச் சொல் பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலுர்
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.