Author: ceo

ALL GOVT/MPL/AIDED HIGH & HR.SEC.SCHOOL HMs-HANDOVER DETAILS OF TEACHERS IN HSC EXAM DUTY/ NOT IN DUTY BEFORE 5.00 PM TODAY (08.03.2018)

CIRCULARS
TO ALL GOVT/MPL/AIDED HIGH & HR.SEC.SCHOOL HEADMASTERS, /மிக அவசரம்/ அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு நடைபெற்றுக் கொண்டிருக்கும் மேல்நிலை இரண்டாமாண்டு மற்றும் முதலாமாண்டு பொதுத் தேர்விற்கு தங்கள் பள்ளியிலிருந்து தேர்வு பணிக்கு செல்லாதோர் மற்றும் தேர்வுப்பணியில் ஈடுபட்டிருக்கும் முதுகலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி விவரம் கீழ்கண்ட படிவங்களில் (1 மற்றும் 2 )பூர்த்தி செய்து இன்று  (08.03.2018) மாலை 5.00க்குள் வேலூர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலகத்தில் தனி நபர் மூலம் வருகைப்பதிவேட்டுடன் வந்து ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE FORMS 1 & 2 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

SSLC EXAM MARCH/APRIL 2018- DOWNLOADING OF HALL TICKETS -INSTRUCTIONS

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள், மார்ச்/ஏப்ரல் 2018 10ம்வகுப்பு பொதுத்தேர்வெழுதவுள்ள மாணவர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டினை 07.03.2018 முதல் www.dge.tn.gov.in என்ற இணைய தளத்திலிருந்து பள்ளிகள் தங்களது USER ID மற்றும் PASSWORD பயன்படுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும், 2018 பத்தாம் வகுப்பு பொதுத்தேர்விற்கான பெயர்ப்பட்டியலில் பள்ளி மாணவ/மாமணவியர் பெயர், பிறந்த தேதி, மொழி ஆகிய திருத்தங்கள் ஏதுமிருப்பின் சம்மந்தப்பட்ட தேர்வு மைய கண்காணிப்பாளர்களை அணுகி தேர்வு மையத்திற்கான பெயர்பட்டியலல் உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி,  சம்மந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

ALL HSC EXAM MARCH/APRIL CHIEFS – அறைகண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு சார்பான அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு, சில மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் அறைகண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு செய்து அல்லது குறைவான பணி ஒதுக்கீடு செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் நாட்கள் அறைகண்காணிப்புப்பணி வழங்கப்படுவதாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில்,  ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கட்டாயம் முதுகலை ஆசிரியர்களுக்கு அனைத்து மேல்நிலைத்தேர்வு நாட்களிலும் அறைகண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்து தேவைப்படும் இடங்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை அறை கண்காணிப்புப்பணி வழங்கிட முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கோரப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

மாநில அரசு பாடதிட்டம் அல்லாத பிற வாரிய பள்ளிகள்- சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., ஐ.பி. உள்ளிட்ட அனைத்து வகையான பிற வாரிய பள்ளிகள் – பள்ளி கல்வித்துறையின் அங்கீகாரம் பெற்று இயங்குதல்

CIRCULARS
மாநில அரசு பாடதிட்டம் அல்லாத பிற வாரிய பள்ளி முதல்வர்கள், குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 பிரிவு 18(1)ன்படி அனைத்துவகையான பள்ளிகளும் அரசின் அங்கீகாரம் பெற்றே இயங்க வேண்டும் எனவும் அங்கீகாரம் பெறாத பள்ளிகள் இயங்க அனுமதிக்கக்கூடாது எனவும் தெளிவாக குறிப்பிடப்பட்ள்ளது. எனவே, தமிழ்நாடுபள்ளிக் கல்வித்துறையின் அங்கீகாரம் பெறாமலும், தொடர் அங்கீகாரம் இல்லாமலும் செயல்பட்டுவரும் மாநில பாட வாரியம் அல்லாத சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.சி., ஐ.ஜி.சி.எஸ்.இ., ஐ.பி., போன்ற பள்ளிகளுக்கான விவரங்களுடன் சார்ந்த பள்ளி முதல்வர்கள் 08.03.2018 அன்று பிற்பகல் 4.00 மணியளவில் முதன்மைக்கல்விஅலுவலகத்தில் நடைபெறும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

NATIONAL ELIGIBILITY CUM ENTRANCE TEST (NEET) (UG), 2018- ADMISSION NOTICE – LAST DATE 09.03.2018 -MOST URGENT

CIRCULARS
அனைத்துஅரசு/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,        இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பின்படி NEET 2018 தேர்விற்கு விண்ணப்பிக்க 09.03.2018 இறுதி நாளாக உள்ள நிலையில், அது சார்பான அறிவிப்பினை பள்ளி தகவல் பலகையில் ஒட்டிவைப்பதுடன், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு தெரிவித்து விருப்பமுள்ள மாணவர்களை தேர்வெழுத விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறும், விண்ணப்பித்தல் சார்பான சந்தேகங்களை மாணவர்களுக்கு அறிவுரைகள் வழங்குமாறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பக் கட்டணம் செலுத்த இயலாத தகுதியும் திறமையும் உள்ள மாணவர்கள் இருப்பின் தலைமையாசிரியர்கள் மற்றும் சக ஆசிரியர்கள் உதவியுடன் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.                 தங்கள் பள்ளியில் NEET தேர்வு 2018ற்கு Online மூலம் www.cbseneet.nic.in இணையதளத்தில்  விண்ண