ALL HSC EXAM MARCH/APRIL CHIEFS – அறைகண்காணிப்பாளர் பணி ஒதுக்கீடு சார்பான அறிவுரைகள்

அனைத்து மேல்நிலைத்தேர்வு மைய முதன்மைக்கண்காணிப்பாளர்களுக்கு,

சில மேல்நிலை பொதுத்தேர்வு மையங்களில் அறைகண்காணிப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள முதுகலை ஆசிரியர்களுக்கு பணி விடுவிப்பு செய்து அல்லது குறைவான பணி ஒதுக்கீடு செய்து பட்டதாரி ஆசிரியர்களுக்கு கூடுதல் நாட்கள் அறைகண்காணிப்புப்பணி வழங்கப்படுவதாக தகவல் பெறப்பட்டுள்ள நிலையில்,  ஒவ்வொரு தேர்வு மையத்திலும் கட்டாயம் முதுகலை ஆசிரியர்களுக்கு அனைத்து மேல்நிலைத்தேர்வு நாட்களிலும் அறைகண்காணிப்புப் பணி ஒதுக்கீடு செய்து தேவைப்படும் இடங்களுக்கு மட்டும் பட்டதாரி ஆசிரியர்களை அறை கண்காணிப்புப்பணி வழங்கிட முதன்மைக் கண்காணிப்பாளர்கள் கோரப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.