Author: ceo

கொரோனா நோய் தடுப்பு பணி செய்த ஆசிரியர்களுக்கு பாராட்டு

CIRCULARS
சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, கொரோனா நோய் தடுப்பு பணிகளில் தன்னார்வத்துடன் இணைத்துக்கொண்டு வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் பள்ளிக்கல்வித்துறையின் அழைப்பினை ஏற்று பணிகளை செய்த ஆசிரிய ஆசிரியைகள் அனைவருக்கும் 03.03.2022 வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வேலூர் மாவட்ட ஜுனியர் ரெட்கிராஸ் அலுவலகம், பிள்ளையார் கோயில் தெரு, விருதம்பட்டு, மோட்டூர் (குமரன் மருத்துவமனை பின்புறம்) சான்றிதழ் வழங்கி பாராட்டும் விழா நடைபெற உள்ளது பட்டியல் இணைக்கப்பட்டுள்ள தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  மேலும் சார்ந்த ஆசிரியர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்கும் வகையில் தலைமையாசிரியர்கள் பணிவிடுப்பு செய்திடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். VolunteerList-March2022-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 23.02.2022 அன்று நடைபெற்ற அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் – கூட்ட நடவடிக்கைகள்

CIRCULARS
அனைத்துவகை உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, சத்துவாச்சாரி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேனிலைப் பள்ளியில் 23.02.2022 அன்று அனைத்து வகை உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. கூட்ட நடவடிக்கைகள். HM-Meeting-minutes-23.02.2022Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் சமர்பிக்கக் கோருதல் -சார்பாக.

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் – வேலூர் மாவட்டம் – குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009 25% ஒதுக்கீட்டின் கீழ் பிரிவு 12 (1) (சி) ன் படி 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் பயின்ற குழந்தைகளுக்கு தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக் குழுவால் பள்ளிக்கு வகுப்பு வாரியாக நிர்ணயம் செய்யப்பட்ட ஆணையின் நகல் தொடர்பாக கீழ்க்காணும் செயல்முறைகளில் தெரிவித்துள்ளாறு உடன் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது. 522-2022-FEE-COMMEETE-ORDER-1Download //ஒப்பம்// க.முனுசாமி

சாலை பாதுகாப்பு – அரசு பள்ளி மாணவர்களுக்கு – விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் – போட்டிகள் – ஊர்வலங்கள் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, அரசு பள்ளி மாணவர்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் போட்டிகள் ஊர்வலங்கள் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/நகராட்சி/ நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -006-B1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

கருணை அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள் விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு கருணை அடிப்படையில் A மற்றும் B பிரிவின் கீழ் ( பட்டதாரி ஆசிரியர் பணியிடம் அல்லது முதுகலை ஆசிரியர் பணியிடத்தில்) 27-09-2001 முதல் 19-07-2006 க்குள் நியமனம் பெற்றவர்கள் கீழ்க்குறிப்பிட்டுள்ள அலைபேசியில் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அ1 பிரிவு எழுத்தர் எஸ். சுரேந்தர்பாபு, 9442273554 முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பப்படுகிறது.

Career Gudiance and Counselling- Backdrop and Link

CIRCULARS
அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, நாளை தங்கள் பள்ளியில் நடைபெறும் Career Gudiance and Counselling நிகழ்ச்சி சார்பான Backdrop மற்றும் Link இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. பதிவிறக்கம் செய்து செயல்படுமாறு அனைத்து அரசு/ நிதியுதவிபெறும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு : Backdrop-ல் கீழ் பகுதியில் தங்கள் பள்ளியின் பெயர் மற்றும் முகவரியினை இடம்பெறச்செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. Career-Gudiance-messageDownload link https://linktr.ee/career.live முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

முதன்மை கல்வி அலுவலரால் நாளை காலை 11 மணிக்கு நடத்தப்படும் கூகுள் மீட்டில் Link-ஐ click செய்து அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கவனத்திற்கு வருகின்ற 01.03.2022அன்று செவ்வாய்க்கிழமை நம் பள்ளியில் பயிலும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான கேரியர் கைடன்ஸ் குறித்து ஆன்லைன் நிகழ்ச்சிநடைபெற உள்ளது இந்நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பங்கு கொள்ளும் வகையிலும் அவர்களது பெற்றோர்கள் பங்குகொண்டு பயன்பெறும் வகையிலும் கீழ்க்கண்ட விபரங்கள் கோரப்படுகின்றன எனவே அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்கப்படும் விவரங்களை உடனடியாக இந்த வாட்ஸ்அப் குரூப்பில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது 1.எல்சிடி மானிட்டர் உள்ள பள்ளிகள் 2.11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் ஒன்றாக அமர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் அளவில் உ

900 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை மற்றும் 700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல்

CIRCULARS
அணைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 900 முதுகலை ஆசிரியர்கள் தற்காலிக பணியிடங்களுக்கு பிப்ரவரி மாதத்திற்கான ஊதிய கொடுப்பாணை மற்றும் 700 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 01.08.2021 முதல் 31.07.2024 வரை தொடர் நீட்டிப்பு ஆணை வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள ஆணைகளை பதிவிறக்கம் செய்து நடவடிக்கை மேற்கொள்ளம்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். EXPRESS PAY ORDER FOR FEBRUARY 2022 POST CONTINUANCE ORDER FOR 700 BT POSTS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று நடைபெறுதல் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், வேலூர் மாவட்டம் போலியோ தடுப்பு மருந்து வழங்கும் முகாம் வருகின்ற 27.02.2022 ஞாயிறு அன்று நடைபெறுதல் அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் உரிய நடவடிக்கை மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்  சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 487-B3Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

வேலூர் மாவட்டம் கல்வித்துறை அலுவலகங்கள், அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவுஎழுத்தர்கள் இளநிலை உதவியாளர் பதவிக்கு பதவி உயர்வு பெற தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு 15-03-2021 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டக் கல்வி அலுவலகம், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகங்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவு எழுத்தர்கள் இளநிலை உதவியாளர் பதவிக்கு தகுதிவாய்ந்தோர் பெயர் பட்டியல் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர், அனைத்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், அரசுஉயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு RC-TO-JA-LETTER-15.03.2021-4Download Download