அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு
மார்ச் 2019ல் நடைபெற்ற முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு முடிவுகள் 19-04-2019 இன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வு முடிவுகளில் தங்கள் பள்ளி சார்பாக முதல் மூன்று இடங்களை பெறும் மாணவர்களின் தரம் அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. அரசாணை எண் (நிலை) எண் 91, பள்ளிக் கல்வி (அ தே)த் துறை நாள் 11-05-2017 அரசைணையை செயல்படுத்த அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் சென்னை பள்ளிக் கல்வி இயக்குநர் அவர்களிடமிருந்து பெறப்பட்ட செயல்முறை கடிதம் இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அக்கடிதத்தில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மேலும் மேற்குறிப்பிட்டுள்ள அரசாணையின்படி செயல்படாத பள்ளிகள் மீது விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
இணைப்பு
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலுர்.
பெறுநர்,
அனைத்து மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்
நகல்
மாவட்டக் கல்வி அலுவலர்
அரக்கோணம் / இராணிப்பேட்டை / வேலுர் / வாணியம்பாடி / திருப்பத்துர் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.