2021-2022ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிட்டமை – திருத்தங்கள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல்

அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

2021-2022ஆம் கல்வி ஆண்டு ஆசிரியர்கள் பொதுமாறுதல் சார்பான விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்தமை – முன்னுரிமைப் பட்டியல் வெளியிட்டமை – திருத்தங்கள் மேற்கொள்ளுதல் சார்பாக இணைப்பில் உள்ள ஆணையரின் செயல்முறைகளில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி உரிய திருத்தங்கள் மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 22.01.2022 அன்று மாலை 5.00க்குள் மேற்படி திருத்தங்கள் மேற்கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால் எவ்வித தவறுதலும் இன்றி செயல்படுமாறு அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்