மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 – இறுதி DCS REPORT வெளியிடுதல்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

 

மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மே 2021 தொடர்பாக  தேர்வு மையம் வாரியாக இறுதி  DCS Report இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.

தேர்வு மைய பள்ளிகள் விவரம், இணைப்பு பள்ளிகள் விவரம் மற்றும் மாணவர்களின் எண்ணிக்கை விவரம் போன்றவைகளில் திருத்தம் இருப்பின் உடன் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தேர்வுகள் பிரிவு எழுத்தரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும்  வேலுர்  மாவட்டத்திலிருந்து புதிய மாவட்டங்களான திருப்பத்துர் , இராணிப்பேட்டை மாவட்டங்கள் துவங்கப்பட்டதால் வேலுர் மாவட்டத்திலுள்ள மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்வு மைய எண்கள் புதிதாக வழங்கப்பட்டுள்ளது. அந்த தேர்வு மைய எண்களை குறித்து வைத்துக்கொள்ளுமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தேர்வுகள் பிரிவு எழுத்தர் = திரு. ச. சுரேந்தர் பாபு , 9442273554 / 9488880036

இணைப்பு

FINAL DCS REPORT VELLORE DIST

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.