அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் எந்த பள்ளியும் விடுபடாமல் அவசியம் செயல்படுதல் – வேலூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் சார்பான அடிப்படை பயிற்சி 22.11.2019 முதல் 28.11.2019 வரை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுதல்

உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் ஆணைக்கிணங்க வேலூர் கல்வி மாவட்டத்தில் உள்ள  அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் எந்த பள்ளியும் விடுபடாமல் அவசியம் செயல்படவேண்டும்.

வேலூர் கல்வி மாவட்டத்தை சார்ந்த அரசு / அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் சாரண, சாரணியர் இயக்கம் சார்பான அடிப்படை பயிற்சி நடைபெறுதல்.

உயர்திரு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் கல்வி இணை செயல்பாடாக சாரண, சாரணியர் இயக்கம் அனைத்து  பள்ளிகளிலும் விடுபடாமல் அவசியம் செயல்படவேண்டும் என அறிவுறுத்தப்பட்டதற்கிணங்க, தற்போது, பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்/ மேல்நிலைப்பள்ளிகளில் பாரத சாரண சாரணிய இயக்கம் சில பள்ளிகளில் துவங்கப்படாமல் உள்ளதாலும், மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்பு ஆகியவற்றை மேம்படுத்தும் பொருட்டும், அவர்களின் கல்வி நலன் உயர்த்தும் வகையிலும் அனைத்து பள்ளிகளிலும் பாரத சாரண/சாரணியர் அமைப்பு தொடங்கி கண்டிப்பாக செயல்பட வேண்டும் என்ற நோக்கில் வரும் 22.11.2019 முதல் 28.11.2019 வரை காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறும் சாரண ஆசிரியர்கள் மற்றும் வழிகாட்டி தலைவிகளுக்கான (GUIDE CAPTAIN) ஏழு நாட்கள் அடிப்படைப் பயிற்சி முகாமில் கலந்து கொள்ள ஏதுவாக, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல் நிலைப்பள்ளிகளில் உள்ள சாரண ஆசிரியரையோ/ தகுதிவாய்ந்த ஒரு ஆசிரியரோ பள்ளிக்கு ஒருவர் வீதமும், இருபாலார் பள்ளிகளை பொருத்தவரையில் இருபாலாசிரியர்களாக இரண்டு பேரையும் கலந்துகொள்ளும் வகையில் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் மேற்கண்ட பயிற்சிக்கு விடுவித்த அறிக்கையினையும் பொறுப்பாசிரியர்கள் நியமித்த விவரத்தினையும் இவ்வலுவலக ‘சி4’ பிரிவிற்கு 20.11.2019க்குள் வேலூர் கல்வி மாவட்டத்தைச் சார்ந்த அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தொடர்புக்கு :   திரு அ.சிவக்குமார், செயலர்   கைபேசி :8667058845

திரு பி.சங்கர், பொருளாளர்    கைபேசி  9442314923

பயிற்சி நாட்கள்: 22.11.2019 முதல் 28.11.2019 வரை ஏழு நாட்கள்,

இடம்: அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, காட்பாடி.

CEO, VELLORE