சார்ந்த கல்வி மாவட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பிரைமரி முதல்வர்கள் கவனத்திற்கு, (கீழ் குறிப்பிட்டுள்ளவாறு)
04.04.2019 (வியாழக் கிழமை) காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் (SSA) நடைபெறவுள்ள 2019-2020 கல்வி ஆண்டிற்கான RTE 25% சேர்க்கை சார்பான அறிவுரைகள் வழங்கும் கூட்டத்திற்கு கீழ் குறிப்பிட்டுள்ள கல்வி மாவட்டங்களைச் சார்ந்த பள்ளி முதல்வர்கள் தவறாமல் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.
கூட்டம் நடைபெறும் நேரம் மற்றும் கல்வி மாவட்டம்
காலை 10.00 மணி முதல் – திருப்பத்தூர் கல்வி மாவட்டம்
முற்பகல் 11.00 மணி முதல் – வாணியம்பாடி கல்வி மாவட்டம்
பிற்பகல் 2.00 மணி முதல் – அரக்கோணம் கல்வி மாவட்டம்
பிற்பகல் 3.00 மணி முதல் – இராணிப்பேட்டை கல்வி மாவட்டம்
இடம் : காட்பாடி, அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கம்
சார்ந்த பள்ளி முதல்வர்கள் கூட்டத்திற்கு வருகைபுரியும்போது தங்கள் பள்ளியின் RTE intake capacity சார்பான விவரத்தை தவறாமல் கொண்டுவருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
இது மிகவும் அவசரம்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.