EMIS இணையதளத்தில் Login- செய்து DECLARATION FORM-ல் வருகைப்பதிவேட்டை ஒப்பீடு செய்து ACCEPT AND SUBMIT – ஐ Click செய்யவும். இவ்விவரத்தை 14.08.2018க்குள் செய்து முடிக்கும்படி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு

 

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும் தங்கள் பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்கள் விவரங்களையும் வருகைப் பதிவேட்டில் உள்ளபடி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்தல் வேண்டும்.

மேலும் தங்கள் பள்ளிக்குரிய EMIS USER ID மற்றும் PASSWORD – ஐ  பயன்படுத்தி Login- செய்தால் அதில் HM DECLARATION FORM எனும் OPTION தோன்றும் அதனை Click செய்தால் உள்ளீடு செய்யப்பட்ட தங்கள் பள்ளி  மாணவர்களின் விவரங்கள் வகுப்பு, சாதி மற்றும் இன  வாரியாக பதிவு செய்யப்பட்ட ஒரு திரை தோன்றும். அதனை சரிபார்த்து தலைமையாசிரியர் சான்றில் (HM’s Certificate)  அனைத்து மாணவர்களின் விவரங்கள் பள்ளி வருகைப் பதிவேட்டுடன் ஒப்பிட்ட பிறகு என்னால் சரிபார்க்கப்பட்டன என  ACCEPT AND SUBMIT கொடுக்கும் படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

இப்பணியினை 14.08.2018-க்குள் முடிக்கும்படியும் உள்ளீடு செய்யப்பட்ட மாணவர்களின் விவரங்களில் நாளடைவில் தவறுகள் ஏதேனும் இருந்து கண்டறிப்படின் சார்ந்த பள்ளி தலைமையாசிரியரே முழு பொறுப்பேற்க நேரிடும் என அனைத்து பள்ளி தலைமையாசிரியர்கள் / முதல்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்