Author: ceo

தூய்மை இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள், தூய்மை இந்தியா- பள்ளி மாணவர்களுக்கு கழிவறை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றல். அனைத்து மாணவர்களையும் பள்ளி வழிபாட்டு கூட்ட திடலில்  (12.02.2018 முதல் 16.02.2018 க்குள்) உறுதிமொழி ஏற்க தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் செயல்முறைகள் மற்றும் உறுதிமொழி இணைக்கப்பட்டுள்ளது. உறுதிமொழி ஏற்கப்பட்ட புகைப்படத்தை. CLICK HERE TO DOWNLAOD THE  PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE PLEDGE முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல்

பெறுர் அரசு/நகரவை/நலத்துறை  உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு,   RMSA – வேலூர் மாவட்டம்-2017-18ம் நிதியாண்டின் தொடர் செலவின ஒதுக்கீடு- பள்ளிகளுக்கான பள்ளி மான்யத் தொகை – Aircel CUG கட்டணத் தொகை செலுத்துதல் Procedding for School grant -H.M's-Aircel CUG-29.01.2018 முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/ அரசு நிதி உதவிபெறும் பள்ளிகள்- சிறப்புக் கட்டணம்- விளையாட்டு உபகரணங்கள் வாங்கி பயன்படுத்துல்

CIRCULARS
  அனைத்து அரசு / நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 2016-17 மற்றும் 2017-18ஆம் ஆண்டிற்கு வழங்கப்பட்ட சிறப்புக்கட்டணத்தில் விளையாட்டுப்பொருள் வாங்கிய விவரம் (தொகை) கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை  செய்து உடனடியாக உள்ளீடு செய்யுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE CIRCULAR REGARDING SPECIAL FEES முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.

TNPSC GROUP IV EXAM ON 11.02.2018 – INSTRUCTIONS TO HSS HMs AND TEACHERS -REG

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி GROUP IV எழுத்துத்தேர்வு 11.02.2018 முற்பகல் நடைபெறுவது தேர்வு மைய தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள் மற்றும் ஆசிரியர்கள் இணைப்பில் கண்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரையினை பின்பற்றி தேர்வுகள் நடைபெற தக்க முன்னேற்பாடுகள் மற்றும் ஒத்துழைப்பினை நல்கிடவும் மேலும், எந்தவித புகாருக்கும் இடமளிக்காவண்ணம் தேர்வினை சிறப்பாக நடத்தி முடித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS REGARDING TNPSC INSTURCTIONS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

01.01.2016 முதல் ஓய்வு பெற்று திருத்திய ஊதிய நிர்ணயத்தின்படி ஓய்வூதிய கருத்துருக்கள் சமர்ப்பிக்காத மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 10.02.2018 சனிக்கிழமை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CIRCULARS
அனைத்து  மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   01.01.2016 முதல் ஓய்வு பெற்று திருத்திய ஊதிய நிர்ணயத்தின்படி ஓய்வூதிய கருத்துருக்கள் சமர்ப்பிக்காத மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் 10.02.2018 சனிக்கிழமை இவ்வலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்   முதன்மைக்கல்வி அலுவலர்,வேலூர்.  

உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டிற்காக மற்றும் 31.05.2018ல் ஓய்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்/ தையல்/ இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,   உத்தேச காலிப்பணியிட மதிப்பீட்டிற்காக மற்றும் 31.05.2018ல் ஓவ்வு பெறுவதால் ஏற்படக்கூடிய உடற்கல்வி ஆசிரியர்/ தையல்/ இசை/ஓவிய ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் மற்றும் தமிழ் ஆசிரியர் காலிப்பணியிட விவரங்கள் இணைப்பில் கண்ட படிவங்களில்  பூர்த்தி செய்து  velloreceo@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்கு அனுப்பிவிட்டு , 12.02.2018க்குள் ‘ஆ4’ பிரிவில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORMS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்- பணிவரன்முறை கருத்துருக்கள் கோருதல்

CIRCULARS
  அனைத்து அரசு/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித்தலைமையாசிரியர்கள்,   தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணயம் மூலம் உதவியாளர்களாக தேர்வு செய்யப்பட்டவர்- பணிவரன்முறை கருத்துருக்களை இணைப்பில் உள்ள செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி  12.02.2018க்குள் நேரடியாக ஒப்படைக்கும்படி  தெரிவிக்கப்படுகிறது. CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS CLICK HERE TO DOWNLOAD THE FORM முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.  

பிப்ரவரி 2018 மாதத்திற்கான ஆசிரியர் குறைதீர்வு நாள் மற்றும் இதர குறைகள் சார்ந்து வரும் 10.02.2018 சனிக்கிழமை 9.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, பிப்ரவரி 2018 மாதத்திற்கான ஆசிரியர் குறைதீர்வு நாள் (தேர்வுநிலை/ சிறப்புநிலை/ பணிவரன்முறை/ தகுதிகாண்பருவம்) மற்றும் இதர குறைகள் சார்ந்து வரும் 10.02.2018 சனிக்கிழமை 9.30 முதல் பிற்பகல் 3.00 மணி வரை வேலூர் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும். மேற்படி குறை தீர்வு நாளில் சார்ந்த  ஆசிரியர் கலந்துகொள்ளுமாறும் மேற்காணும் இனங்களில் அனைத்து கல்வி சான்றுகள் உண்மை தன்மை பெற்று முறையாக பதிவு செய்து தகுதியாக உள்ளவர் சார்ந்து கருத்துருக்கள் மட்டுமே அனுப்பிவைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எக்காரணத்தை முன்னிட்டும் முழுமைபெறாத கருத்துருக்களை அனுப்ப வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.

+2 செய்முறைத்தேர்வு மதிபெண் பட்டியல் மற்றும் செலவின பற்றுச்சீட்டுகளை காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/முதல்வர்கள்,   +2 செய்முறைத்தேர்வு மதிப்பெண் பட்டியல் மற்றும் செலவின பற்றுச்சீட்டுகளை  காட்பாடி, அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் ஒப்படைக்குமாறு அனைத்து தலைமையாமசிரியர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.   முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.