Author: ceo

உள்ளாட்சித் தேர்தல் 2021 – 24-09-2021 அன்று பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் அனைத்து பள்ளிகளுக்கு 24-09-2021 அன்று விடுமுறை என அறிவிப்பு

அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு. அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி  நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தல் தேர்தல் பணியில்   அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும்ஆசிரியரல்லாத பணியாளர்கள் 29-09-2021 அன்று நடைபெறும் இரண்டாம் கட்ட  தேர்தல் பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள உள்ளதால்  மாவட்ட ஆட்சியர் அவர்களின் ஆணைக்கிணங்க அனைத்துவகை பள்ளிகளுக்கும்   29-09-2021 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. தேர்தல் பணிக்கான ஆணை பெற்றவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மையங்களில் குறித்த நேரத்தில் கலந்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள். 30-09-2021 வியாழக்கிழமை முதல் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்பட

All Categories of School HMs/ Matric Principals – உள்ளாட்சி தேர்தல் 2021 – தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை உள்ளீடு செய்ய தெரிவித்தல் (மெட்ரிக் பள்ளிகள் உட்பட)

CIRCULARS
அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ மெட்ரிக் மற்றும் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள், உள்ளாட்சி தேர்தல் 2021 - தேர்தல் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் பணியாளர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்பு ஆணை கிடைக்கப்பெறாதவர்களின் விவரங்களை இன்று (23.09.2021) மாலை 4.00 மணிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பினை Click செய்து உள்ளீடு செய்யும்படி அனைத்து உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து Google Formல் Upload செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE FORM -Order-not-received-3Download CLICK HERE TO ENTER THE DETAILS CamScanner-09-23-2021-14.48.26_2Download முதன்மைக்கல்வி அல

ADVISORY TO PARENTS AND TEACHERS ON CHILDREN’S SAFE ON-LINE GAMING – INSTRUCTIONS.

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/முதல்வர்களுக்கு, பள்ளி மாணவர்கள் Online-Games விளையாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள கடிதங்களை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி நடக்க அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ தாளாளர்கள்/முதல்வர்களுக்கு, தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Childrens-safe-online-gaming_20210923_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிவதற்கான பயிற்சி ஆணை வழங்குதல் தொடர்பாக

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு (மெட்ரிக் பள்ளிகள் தவிர) உள்ளாட்சித் தேர்தல் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரியவுள்ள ஆசிரியர்களுக்கான பயிற்சி ஆணை வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவு எழுத்தரிடம் 21-09-2021 அன்று காலை 10.00 முதல் மதியும் 12.00 மணிக்குள் பெற்றுக்கொள்ளுமாறு அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். ஆசிரியர்களின் பயிற்சிக்கான ஒப்புதல் சீட்டு இன்று மாலைக்குள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலக அ1 பிரிவில் ஒப்படைக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். முதன்மைக் கல்விஅலுவலர் வேலு பெறுநர் அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் ந

23.09.2021 அன்று அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு/ அரசு நிதிஉதவி – உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS
அரசு/ அரசு நிதிஉதவி - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 23.09.2021 அன்று அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுவதாக இருந்த அரசு/ அரசு நிதிஉதவி - உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான கூட்டம் இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி மனுதாரர் கோரும் தகவல்களை அளிக்க தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005-ன்படி பார்வை (1)-ல் காணும் மனுதாரரின் மனு தகவல் அறியும் சட்டத்தின் உட்பிரிவு 6(3)-ன்படி உரிய நடவடிக்கைக்காக அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்படுகிறது. மனுதாரர் கோருகின்ற தகவலினை நிர்ணயிக்கப்பட்ட காலவரையறைக்குள் மனுதாரக்கு நேரடியாக அனுப்பிவிட்டு அதன் நகலினை இவ்வலுலவகம் அனுப்பி வைக்குமாறு அனைத்து அரசு உயர் / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS - RTI-BALU-1Download RTIDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி – 20.09.2021 (நாளை) அன்று காலை 8.30 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்

CIRCULARS
வட்டாரவள மைய மேற்பார்வையாளர்களுக்கு, 2021-2022- ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி - 20.09.2021 (நாளை) அன்று காலை 8.30 மணிக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக (SSA) கூட்ட அரங்கில் நடைபெறுவதாக இருந்த ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான (BRTE) பொது மாறுதல் கலந்தாய்வு நிர்வாக காரணங்களினால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் – தலைமையாசிரியர்கள் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்து விவரங்களை 23.09.2021க்குள் மாவட்டக்கல்வி அலுவலத்தில் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்து அரசு/நகரவை/ஆதிதிராவிடர் நல/ நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியக்ளுக்கு, மத்திய அரசின் சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை திட்டம் - மாவட்ட ஆட்சியரின் கடிதம் மற்றும் அறிவுரைகளின்படி தலைமையாசிரியர்கள் ஆதார் எண் விவரங்கள் UIDAI மூலம் சரிபார்த்து விவரங்களை 23.09.2021க்குள் மாவட்டக்கல்வி அலுவலத்தில் தகவல் தெரிவிக்குமாறு அனைத்து தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. Scholarship_20210919_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலுர்

ALL GOVT. HS AND HSS- 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு Basic Quiz Hi-Tec Lab மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்துதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து அரசு உயர்/ மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். TRAINING-THROUGH-HI-TEC-LAB_20210917_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்