பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம் – வழிகாட்டி ஆசிரியர் விபரம் சரிபார்த்தல்

கடந்த வருடம் 2022-2023 ஆம் கல்வியாண்டில் SIDP (பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்) வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் பள்ளியின் பெயருடன் பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் இக்கல்வியாண்டில் 2023-2024ல் வருடம், வழிகாட்டி ஆசிரியரில் ஏதேனும் மாற்றம் இருப்பின் கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் தற்போது வழிகாட்டி ஆசிரியராக செயல்படும் ஆசிரியரை பதிவிடுமாறு அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று மாலைக்குள் பதிவிடுமாறும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு: வழிகாட்டி ஆசிரியராக செயல்பட்டவர்களின் பெயர் பட்டியலுக்கான google link

https://docs.google.com/spreadsheets/d/1caJXgj2SNw7EKZcIy5EU8ldP19gavTZhpYjC0umlXcM/edit#gid=0

//ஒப்பம்//                                       

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

தலைமையாசிரியர்கள்,

அனைத்து அரசு / அரசு நிதியுதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகள்,

வேலூர் மாவட்டம்.