வேலூர் மாவட்டம் – அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை/ உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு NMMS- தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டத் தேர்வு – 2023 – தேர்வு கட்டணம் செலுத்தாத பள்ளிகளின் பெயர் பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பள்ளிகள் இன்று 15.02.2023 மாலைக்குள் www.karuvoolam.tn.gov.in என்ற இணையதளத்தில் 020201102AA22713 என்ற கணக்குத் தலைப்பில் செலுத்துச்சீட்டு E- Challan – மூலம் செலுத்திவிட்டு E- Challan மற்றும் Summary Report அரசுத் தேர்வுகள் இயக்ககம், கல்புதூர் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.   

ஒப்பம் .க.முனுசாமி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அரசு/ அரசு உதவிபெறும் நடுநிலை / உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .

சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக்கல்வி) தொடர்நடவடிக்கையின் பொருட்டு