பதிவு எழுத்தர் பணியிலிருந்து இளநிலை உதவியாளர் பதவி உயர்விற்கு தகுதியான பணியாளர்களின் விவரங்கள் கோருதல்

மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் / அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து மாவட்டக் கல்வி அலுவலகங்கள் / வட்டாரக் கல்வி அலுவலகங்கள் மற்றும் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பதிவு எழுத்தர்களுக்கு இளநிலை உதவியாளராக பதவி உயர்வு வழங்க தகுதியான பணியாளர்களின் விவரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 10-01-2022 அன்று பிற்பகல் 03.00 மணிக்குள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக அ1 பிரிவில் நேரில் ஒப்படைக்க நடைவடிக்கை மேற்கொள்றுமாறு மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் / அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இணைப்பு

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் / அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் / அனைத்து அரசு உயர் / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்