Month: July 2022

2022-2023ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கும் வகையில்  இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் மற்றும்  கருத்தாளர்களுக்கான கூட்டம் 18.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக(SSA)  கூட்ட அரங்கில் நடைபெறுதல்

CIRCULARS
சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,(பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) 2022-2023ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு பட்டதாரி ஆசிரியர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளிக்கும் வகையில்  இணைப்பில் கண்ட தலைமையாசிரியர்கள் மற்றும்  கருத்தாளர்களுக்கான கூட்டம் 18.07.2022 அன்று காலை 10.00 மணிக்கு  காட்பாடி, காந்திநகர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி அலுவலக(SSA)  கூட்ட அரங்கில் முதன்மைக்கல்வி அலுவலர் மற்றும்  மாவட்டக்கல்வி அலுவலர் ஆகியோரால்  நடத்தப்படும் கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ளுமாறு சார்ந்த தலைமையாசிரியர்கள் மற்றும் கருத்தாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். RPs-meeting1 -ListDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மெட்ரிக் பள்ளிகள் – தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணயக்குழு ஆணை சமர்பிக்க கோருதல் – சார்பாக

CIRCULARS, CIRCULARS TO MATRICULATION SCHOOLS
மெட்ரிக் பள்ளிகள் - கட்டண நிர்ணயம் செய்யப்பட்ட ஆணை நகல் ஒப்படைக்க கோருதல் -சார்பாக 2359-2022-1Download //ஒப்பம்// // க.முனுசாமி // முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகள் வேலூர் மாவட்டம்.

SKOCH State of Governance Report card -SKOCH Governance Award 2022- Nomination requested

CIRCULARS
To All Category of School Headmasters, ந.க.எண்.2254/ஆ1/2022, நாள் 07.07.2022 (நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கைக்காகவும் அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது. Click heret to download the attachments முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மே 2022 – 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக படிவம் 1,2,3 ஒப்படைக்காத தலைமை ஆசிரியர்கள் இன்று பிற்பகல் 3.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மே 2022 - 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பான விவரங்கள் பள்ளிகளிலிருந்து 1, 2, மற்றும் 3 படிவங்கள் பூர்த்தி செய்து ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டது. இதில் 10ம் வகுப்பு படிவம் 3 மட்டும் இதுநாள் ஒப்படைக்காத பள்ளிகள் விவரம் கீழ்வருமாறு தெரிவிக்கப்படுகிறது. பல நினைவூட்டுகள் அளித்தும் இதுநாள் வரை கீழ்க்குறிப்பிட்டுள்ள பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை இது வருந்ததக்க செயலாகும். தாங்கள் விவரங்கள் ஒப்படைக்காமல் இருப்பதினால் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு உரிய நேரத்தில் விவரங்கள் ஒப்படைக்காத சூழ்நிலை தங்களால் ஏற்பட்டுள்ளது. காலதாமதத்திற்கான விளக்கத்துடன் இன்று பிற்பகல் 03.00 மணிக்குள் 1,2 மற்றும் 3 படிவங்கள் பூர்த்தி செய்து வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக தட்டச்சர் திரு.

RECOMMENDATIONS FOR “JEEVAN RAKSHA PADAK SERIES OF AWARDS” 2022 – NOMINATIONS CALLED FOR

CIRCULARS
அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள், ந.க.எண்.2255/ஆ1/2022, நாள் 07.07.2022 (நகல்) தகவலுக்காகவும் தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்பொருட்டு அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் அனுப்பப்படுகிறது. அரசு கடித நகல் மற்றும் மின்ஞ்சல் மூலம் பெறப்பட்ட இணைப்புகள் அனுப்பப்படுகிறது. Clickhere to download the attachments முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் – ஜுலை திங்கள் 15ம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டது- 2022 ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் – அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்களுக்கு தெரிவித்தல்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாள் - ஜுலை திங்கள் 15ம் நாளினை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டது- 2022 ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்பாக இணைப்பில் உள்ள பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 15.07.2022 பெருந்தலைவர் காமராசர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கல்வி வளர்ச்சிநாளாக மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தி அதற்கான தொகுப்பு இவ்வலுவலகத்திற்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings -image0000001ADownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மேல்நிலை இரண்டாமாண்டு விடைத்தாள்கள் நகல்களினை பதிவிறக்கம் செய்தல் மற்றும் மறுகூட்டல், மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்தல் சார்பு

அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு மே 2022ல் நடைபெற்று முடிந்த மேல்நிலை இரண்டாமாண்டு தேர்வு முடிவுகள் தொடர்பாக விடைத்தாள் நகல் வழங்ககோரி விண்ணபித்த மாணவர்கள் விடைத்தாட்களை பதிவிறக்கம் செய்தல் , மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய விண்ணப்பிப்பதற்கான செய்திகுறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள்இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. அக்கடிதம் இத்துடன்இணைத்து அனுப்பலாகிறது. தங்களது பள்ளிகளில் இச்செய்திக்குறிப்பு மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அறியும் வண்ணம் தகவல் பலகை மூலம் தெரிவிக்கமாறு அனைத்து மேல்நிலைப் பள்ளிதலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு Scripts-Downloading-RV-RT-II-press-release-1 முதன்மைக் கல்விஅலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து மேல்நிலைப் பள்ளித

16.07.2022 அன்று நடைபெற உள்ள ஜுலை மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனை கூட்டம் சார்பாக அறிவுரைகள்

CIRCULARS
அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மேற்பார்வையாளர்கள், 16.07.2022 அன்று நடைபெற உள்ள ஜுலை மாத ஆசிரியர் திறன் மேம்பாடு கலந்தாலோசனை கூட்டம் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அதில் தெரிவிக்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ வட்டாரக்கல்வி அலுவலர்கள், வட்டாரவள மேற்பார்வையாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SS-VLR-DIST-160722-BRC-CRC-Trg-RegமுதDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

கோவிட் 19 – பெருந்தொற்று- பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள்

CIRCULARS
அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள், கோவிட் 19 - பெருந்தொற்று- பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பின்பற்றப்பட வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்துவகை பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. TapScanner-06-30-2022-13.33-1Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்துவகை பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப்பண்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் – அறிக்கை சமர்ப்பித்தல்

CIRCULARS
அணைத்துவகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள், அனைத்துவகை பள்ளிகளில் மாணவ மாணவியர்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் மற்றும் நன்னெறிப்பண்புகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல் - அறிக்கை சமர்ப்பித்தல் சார்பாக இணைப்பில் உள்ள கோப்பினை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி அணைத்துவகைப்பள்ளித் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Click here to download the attachments முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்