Month: July 2022

2022-2023ஆம் கல்வியாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் பொருட்டு 21.07.2022 முதல் நடைபெறுவதாக இருந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கான புத்தாக்கப்பயிற்சி நிர்வாக காரணங்களால் தற்காலிகமாக இரத்து செய்யப்படுகிறது. தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

CIRCULARS

17.07.2022 அன்று நடைபெற்ற நீட் தேர்வெழுதிய மாணவர்கள் விவரம் உள்ளீடு செய்ய கோருதல்

CIRCULARS
அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, 17.07.2022 அன்று நடைபெற்ற நீட் தேர்வெழுதிய மாணவர்கள் விவரம் இன்று (20.07.2022) பிற்பகல் 3.00 மணிக்குள் உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைலமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். CLICK HERET TO ENTER THE DETAILS முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

மிக மிக அவசரம் – பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – பழுது நீக்கம் செய்ய  வேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரம் கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள், பள்ளிக்கல்வி – 2022-2023ஆம் நிதியாண்டு – அரசு உயர் / மேல்நிலைப்பள்ளி – பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளுதல் – பழுது நீக்கம் செய்ய  வேண்டிய கட்டிடங்கள் சார்பான விவரங்களை தெளிவாக குறிப்பிட்டு புகைப்பட நகலுடன்  உடனடியாக இவ்வலுவலக அ5 பிரிவில் நேரில் ஒப்டைக்குமாறு அனைத்து அரசு உயர்நிலை / மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். MR-Proceedings-ReminderDownload முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிமேலாண்மைக்குழு மூலம் நிரப்புதல் – ஒப்புதல் வழங்குதல்

CIRCULARS
சம்மந்தப்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை பள்ளிமேலாண்மைக்குழு மூலம் நிரப்ப ஒப்புதல் வழங்குதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி தக்க நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். SMC-PG-SELECTED_20220720_0001Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

இடைநிலைக்கல்விப்பணி – அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்புதல்- ஏற்பளிக்கப்பட்ட பட்டியல் வெளியிடுதல்

CIRCULARS
சார்ந்த அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இடைநிலைக்கல்விப்பணி – அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்களை பள்ளி மேலாண்மைக் குழு மூலம் நிரப்புதல்- ஏற்பளிக்கப்பட்ட பட்டியல் வெளியிடுதல் சார்பாக இணைப்பில் உள்ள செயல்முறைகள் மற்றும் பட்டியலை பதிவிறக்கம் செய்து அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி சார்ந்த தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. BT-SMC-TEMP-APPOINTMENTDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அனைத்து வகையான விளையாட்டு போட்டிகள் குறுவட்டம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகள் நடத்துதல்

அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறை கடிதத்தில் தெரிவித்துள்ளவாறு செயல்படுமாறு அனைத்துவகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பு SPORTSDownload முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர் பெறுநர் அனைத்து வகை பள்ளிதலைமை ஆசிரியர்கள் நகல் மாவட்டக் கல்விஅலுவலர்வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது. உடற் கல்வி ஆய்வாளர் வேலூர்அவர்களுக்குதகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

( நினைவூட்டு )NMMS EXAM தேர்வுகள் சார்பான விவரம் கோருதல் மிக அவசரம் தனி கவனம்

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு மிக அவசரம் // தனிகவனம் // இத்துடன் இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தில் உள்ள மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா என கண்டறிந்து திருத்தங்கள் இருப்பின் அல்லது திருத்தங்கள் ஏதுமில்லை என்றால் நாளை 19-07-2022 அன்று காலை 11.00 மணிக்கு உரிய விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். குறிப்பு 30-06-2022 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மூலம் விவரங்கள் கோரப்பட்டு இதுநாள் வரை கீழ்க்காணும் பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை என்பது வருந்ததக்க செயலாகும். மாணவர்களின் கல

அரசு/நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 2022-2023ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்புதல் – தகுதிவாய்ந்த நபர்களை கொண்டு நிரப்பி அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுக்கொள்ளப்பட்டது – அறிக்கை அனுப்பாத பள்ளிகள் 18.07.2022 (இன்று) மாலை 6.00 மணிக்குள் ஒப்படைக்க தெரிவித்தல்

CIRCULARS
சார்ந்த அரசு/ நகரவை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு, (பட்டியல் இணைக்கப்பட்டுள்ளது) இவ்வலுவலக செயல்முறைகளின்படி பார்வை 1ல் காணும் அறிவுரைகளை பின்பற்றி காலியாக உள்ள  முதுகலையாசிரியர் பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் உரிய தகுதிகளின் அடிப்படையில் நியமனம் செய்ய வேண்டியவர் சார்ந்த அறிக்கையினை 16.07.2022 அன்று முதன்மைக்கல்வி அலுவலக “அ4” பிரிவில் ஒப்படைக்க தெரிவிக்கப்பட்டிருந்தும் கீழ்காணும் தலைமையாசிரியர்கள் ஒப்படைக்கப்படாதது வருத்தம் அளிக்கும் செயலாகும், இதனால் பட்டியலை ஏற்பளிக்க முடியாத நிலை உள்ளது. எனவே, 18.07.2022 மாலை 6.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலக ‘அ4‘பிரிவில் காலதாமதத்திற்கான விளக்கத்துடன் நியமனம் செய்ய வேண்டியவர் சார்ந்த அறிக்கையினை அளிக்க கீழ்க்காணும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.     PROCEEDINGS -PG-SMC-appDownload முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

2022-23ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் அனைத்து இன மாணவ/மாணவிகளுக்கும் விலையில்லா மிதிவண்டிகள் வழங்குதல் . உத்தேச தேவைப்பட்டியல் – கோருதல்

CIRCULARS
அனைத்து அரசு/நகராட்சி/நிதியுதவி/பகுதிநிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு/நகராட்சி/நிதியுதவி/பகுதிநிதியுதவி பள்ளிகளில்,  மேல்நிலைப்பிரிவுகளில் 2022-2023ஆம் ஆண்டில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவ/ மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் உத்தேச தேவைப்பட்டியல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 18.07.2022 (இன்று) பிற்பகல் 3.00 மணிக்குள் velloreceo@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பியும் தலைமையாசிரியர் கையொப்பமிட்ட பிரதியினை 21.07.2022க்குள் அனுப்பிவைக்குமாறு அரசு/நகராட்சி/ நிதியுதவி/பகுதிநிதியுதவிப் பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். Proceedings and form -2385-a4-Cost-Free-Bicycle-2022-23Download முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய பெறப்பட்ட விண்ணப்பங்களை, தகுதியின் அடிப்படையில் இணைப்பில் கண்ட வழிமுறைகளின்படி  பின்பற்றுமாறு அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல்

CIRCULARS
அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு, அரசு/ நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்ய பெறப்பட்ட விண்ணப்பங்களை, தகுதியின் அடிப்படையில் இணைப்பில் கண்ட வழிமுறைகளின்படி  பின்பற்றுமாறு அனைத்து அரசு /நகரவை உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அறிவுரைகள் வழங்குதல் சார்பான இணைப்பில் உள்ள அறிவுரைகளை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளும்படி அனைத்து அரசு/ நகரவை உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இணைப்பினை Click செய்து விவரங்களை Google Sheet-ல் உள்ளீடு செய்யவும், இணைப்பில் உள்ள படிவங்களை பூர்த்தி செய்து தலைமையாசிரியர் கையொப்பத்துடன் 18.07.2022 அன்று காலை 11.00 மணிக்கு முதன்மைக்கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்கும்படி அனைத்து அரசு/நகரவை உயர்நிலை மற்றும்