08.06.2018 அன்று மாறுதல் விண்ணப்பம் சரிபார்த்து ஒப்புதல் வழங்காத ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் 09.06.2018 அன்று முதுகலை ஆசிரியர்கள் அரசு (முஸ்லிம்) மேல்நிலைப்பள்ளியிலும், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர் ஆகிய பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் தவறாமல் சென்று விண்ணப்பத்தினை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து அரசு/நகரவை உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்களுக்கு,

08.06.2018 அன்று மாறுதல் விண்ணப்பம் சரிபார்த்து ஒப்புதல் வழங்காத ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் 09.06.2018 அன்று கீழ்கண்ட பள்ளிகளில் காலை 10.00 மணி முதல் தவறாமல் சென்று விண்ணப்பத்தினை சரிபார்த்து ஒப்புதல் அளிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தவறும்பட்சத்தில் பின்னர் விளைவுகளுக்கு சார்ந்த ஆசிரியர்கள்/தலைமையாசிரியர்கள் பொறுப்பேற்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.

இடம் : 

தலைமையாசிரியர்கள் – முதன்மைக்கல்வி அலுவலகம், வேலூர்

முதுகலை ஆசிரியர்கள் – முஸ்லீம் மேல்நிலைப்பள்ளி, வேலூர்

பட்டதாரி ஆசிரியர்கள் – வெங்கடேஸ்வரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்

சிறப்பு ஆசிரியர்              –  வெங்கடேஸ்ரா மேல்நிலைப்பள்ளி, வேலூர்

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.