01.01.2022 நிலவரப்படி அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்குப் பதவி உயர்வு/ பணி மாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தவர்களின் உத்தேச முன்னுரிமைப் பட்டியல் வெளியிடுதல் – புதியதாக சேர்க்கை, திருத்தம் இருப்பின் விவரங்கள் உடனடியாக அனுப்பக் கோருதல் சார்பாக.

தலைமை ஆசிரியர்கள் அரசு / நகரவை / உயர்  / மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்ட அரசு உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இப்பட்டியலை பள்ளி ஆசிரியர்களின் பார்வைக்கு உட்படுத்தி அவர்களது பணி விவரங்கள் சரியாக உள்ளதா, முன்னுரிமை உரிய இடத்தில் நிர்ணயிக்கப்பட்டுள்ளதா எனவும், திருத்தங்கள் இருப்பின் / மற்றும் புதியதாக சேர்க்கை வேண்டியவர்கள் / நீக்க வேண்டிய ஆசிரியர்கள் இருப்பின் அதற்கான உரிய படிவத்தில் இரண்டு நகல்கள் தயார் செய்து தலைமை ஆசிரியர் கையொப்பத்துடன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் நேரில் வந்து வேலூர் மாவட்ட கல்வி அலுவலக கண்காணிப்பாளரை இன்று (08.03.2022) மாலைக்குள் கருத்துருவை ஒப்படைக்கும்படி வேலூர் மாவட்ட உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர் மாவட்டம்.