ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையம் – World Space Week கொண்டாடுதல் – பள்ளி மாணாக்கர்களிடையே போட்டிகள்நடத்துவது – அனைத்து போட்டிகளும் Online வழியாக நடத்தப்படவுள்ளது – மாணாக்கர்கள் கலந்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவித்தல்

அனைத்து வகை தொடக்க / நடுநிலை / உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், மெட்ரிகுலேஷன் பள்ளி முதல்வர்கள்,

ஸ்ரீ ஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி மையம் – World Space Week 04.10.2021 முதல் கொண்டாடப்பட உள்ளது. இது சார்பாக பள்ளி மாணாக்கர்களிடையே போட்டிகள் Online வழியாக நடத்தப்படவுள்ளது. இத்துடன் இணைக்கப்பட்டுள்ள செயல்முறைகள் மற்றும் Brochure பதிவிறக்கம் செய்து அதில் தெரிவித்துள்ள அறிவுரைகளை பின்பற்றி, மாணாக்கர்கள் கலந்துக் கொள்ள செய்ய தக்க நடவடிக்கை மேற்கொள்ள தலைமை ஆசிரியர்கள்/ முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வட்டாரக்கல்வி அலுவலர்கள், தங்கள் ஒன்றித்திற்கு உட்பட்ட பள்ளி தலைமையாசிரியர்களுக்கு இவ்விவரத்தினை தெரிவித்து மாணாக்கர்கள் போட்டிகளில் கலந்துகொள்ள நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.