விளையாட்டு போட்டிகள் – வருவாய் மாவட்ட அளவில் நடைபெறும் புதிய விளையாட்டுபோட்டிகளுக்கு நடுவர்கள் நியமனம் மற்றும் பணியிலிருந்து விடுவிக்க கோருதல் சார்பு

இணைப்பில் காணும் சார்ந்த பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் புதிய விளையாட்டு போட்டிகளுக்கு இணைப்பில் காணும் உடற் கல்வி இயக்குநர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள் நடுவர்களாக நியமனம் செய்யப்படுகிறார்கள். சார்ந்த ஆசிரியர்கள் உரிய நேரத்தில் பணியிலிருந்து விடுவிக்குமாறு இணைப்பில் காணும் சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.

பெறுநர்

சார்ந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் , உடற் கல்வி இயக்குநர் மற்றும் உடற் கல்வி ஆசிரியர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.

மாவட்ட உடற் கல்வி ஆய்வாளர் வேலூர் தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.