மேல்நிலை முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகள்- மார்ச் /ஏப்ரல்-2023-தேர்வு மைய பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்-இதுவரை பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY-வினாத்தாட்கள்   – விவரம்  – சரிப்பார்க்க கோருதல் -சார்பு

தேர்வு மைய மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,

நாளை 6. 3.2023 காலை 9 மணி முதல் 12 மணிக்குள்  தங்கள் வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்திற்கு சென்று  இதுவரை  பெறப்பட்டுள்ள DUMMY மற்றும் NON DUMMY- வினாத்தாட்கள் தங்கள் தேர்வு மையங்களுக்கு போதுமான அளவு பெறப்பட்டுள்ளதா என்பதை சரி பார்த்து  சான்றினை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் வழங்கும் படியும் , வினாத்தாள் கட்டுக்காப்பாளர்கள் அதனை தொகுத்து  வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.  

தொடர்புக்கு: 9791888163   /   7868015820

முதன்மை கல்வி அலுவலர்,

 வேலூர்.

பெறுநர்

அனைத்து மேல்நிலைப்பள்ளி தேர்வு மைய தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர்கள் (இடைநிலை / தனியார் ) தொடர்நடவடிக்கையின் பொருட்டு