மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் சேர்க்கை செய்யப்பட்ட (FINAL ADMISSION) மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கருத்துரு சமர்பிக்க கோருதல் – தொடர்பாக.

மெட்ரிக் பள்ளிகள் /நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள் 2021- 2022 ஆம் நடப்பு கல்வியாண்டில் இலவசக் கட்டாயக் கல்வி திட்டத்தின் கீழ் நுழைவு நிலை வகுப்பில் LKG ல் SELECTED / WAITING LIST ல் நிரந்தரமாக ( FINAL ADMISSION ) செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் பள்ளி EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்ய இயல முடியாத பள்ளிகள் கீழ்க்காணும் விவரங்கள் உடன் சமர்பிக்குமாறு சார்ந்த பள்ளி முதல்வர்கள் / தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  1. 2021 -2022 RTE APPLICATION FOR ADMISSION மாணவனின் விண்ணப்பம்.
  2. 2021- 2022 தங்கள் பள்ளியில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களின்( Selected list) படிவத்தின் படி நகல்-1
  3. 2021-2022 தங்கள் பள்ளியில் WAITING LIST ல் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் படிவத்தின் படி நகல் -1
  4. 2021 – 2022 ஆம் கல்வியாண்டில் SELECTED / WAITING ஆகியவற்றில் நிரந்தரமாக கடைசியாக (FINAL ADMISSION) சேர்க்கை செய்யப்பட்ட மாணவர்களின் விவரம் படிவத்தின் படி நகல்-1
  5. சார்ந்த பள்ளியின் முகப்பு கடிதம் ( Covering Letter ) மேற்கண்ட விவரங்களுடன் 22.11.2021 மாலை 3.00 மணிக்குள் முதன்மைக் கல்வி அலுவலக அ2 பிரிவில் நேரில் ஒப்படைக்குமாறு சார்ந்த மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் நர்சரி & பிரைமரி பள்ளி தாளாளர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு

மேற்காணும் 2021- 2022 ஆம் கல்வியாண்டிற்குரிய RTE மாணவர்களை EMIS ,இணையதளத்தில் சேர்க்கை செய்யப்படாமல் இருந்தால் கேட்பு தொகை பெற இயலாத நிலை உண்டாகும் எனவே மேற்காண் விவரங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேற்காண் தகவல் தவறாக இருக்கும் பள்ளிகள் சார்ந்த பள்ளி முதல்வர்கள் பொறுப்பாகும்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்

பெறுநர்

தாளாளர்கள்

அனைத்து மெட்ரிக் / மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி / நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகள்

வேலூர் மாவட்டம்