முன்னாள் மாணவர்கள் – பள்ளிகளின் வளர்ச்சிக்கு நிதி அளிக்க விருப்பம் தெரிவித்துள்ளவர்கள் பட்டியல்/ பள்ளி வாரியாக

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

அரசுப் பள்ளியின் மீது பொறுப்புணர்வும் அக்கறையும் கொண்ட குறைந்த பட்சம் 25 முன்னாள் மாணவர்களை கண்டறிய செப்டம்பர் 30ஆம் தேதி வரை கால நீட்டிப்பு அளிக்கப்பட்டிருந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்ட தொடர் முயற்சியால் வேலூர் மாவட்டத்தில் 299 முன்னாள் மாணவர்கள் அரசுப் பள்ளியின் மேம்பாட்டில் பங்கேற்க முன்வந்துள்ளார்கள்.

  1. பதிவு செய்துள்ள முன்னாள் மாணவர்களின் பெயர் மற்றும் அலைபேசி எண் இணைப்பில் பகிரப்பட்டுள்ளது.
  2. நன்கொடையாளராக பதிவு செய்த முன்னாள் மாணவர்களை, தலைமை ஆசிரியர்கள் தொடர்புகொண்டு அவர்களின் விருப்பமறிந்து, பள்ளியின் தேவைகளை கலந்தாலோசித்து நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி இணையதள பக்கத்தில் இந்நிதியின் வாயிலாக நிறைவேற்றப்படும் அப்பள்ளியின் தேவைகளை பதிவேற்றம் செய்ய சார்ந்த தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  3. முன்னாள் மாணவர்கள் வாயிலாக பெறப்படும் அனைத்து வகை நன்கொடைகளும் (பொருள் அல்லது நிதி) நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி

https://nammaschool.tnschoolsgov.in/#/

இணையதள பக்க வாயிலாக மட்டுமே பங்களிக்க வலியுறுத்தப்படுகிறது.

/ஒப்பம்/

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்

அனைத்து வகை அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள்

இணைப்பு : நன்கொடையளிக்க விருப்பமுள்ள முன்னாள் மாணவர்களின் விவரப் பட்டியல்/ பள்ளி வாரியாக