முதுகலை தமிழ் மற்றும் ஆங்கிலப் பாட ஆசிரியர்கள் பதவி உயர்வு – 01.01.2021 நிலவரப்படி தகுதி வாய்ந்த பட்டதாரி / ஆசிரிய பயிற்றுநர் / பள்ளித் துணை ஆய்வர் கருத்துருக்கள் 05.02.2022 அன்று நேரில் ஒப்படைக்க தெரிவித்தல்

அனைத்து அரசு / நகராட்சி / உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் / மாவட்டக் கல்வி அலுவலர், வேலூர் / கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, காட்பாடி

தமிழ்நாடு கல்விப் பணியின் கீழ் அமைந்துள்ள தமிழ் மற்றும் ஆங்கிலம் பாட முதுகலையாசிரியர் பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள் மற்றும் பள்ளித் துணை ஆய்வர்கள் விவரங்களை கோரப்பட்டுள்ளது. உடன் இவ்வலுவலகம் அனுப்பிவைக்க தலைமை ஆசிரியர்கள், மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.