பரிச்சைக்கு பயமேன் 2021 நிகழ்ச்சி 4ம் முறையாக 2021 மார்ச் மாதம் 3ம் வாரம் கோவிட் -19 க்கான வழிகாட்டு நெறிமுறைகளையொட்டி இணையவழியில் நடைபெறவுள்ளது -கட்டுரைப்போட்டி நடத்தி பங்குபெற்ற மாணவர்களின் கட்டுரைகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வுக்குழு அமைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களை தெரிவு செய்தல்

/ EXAM WARRIORS AND PPC 2021 /

அனைத்துவகை பள்ளித் தலைமையாசிரியர்கள்,

மாண்புமிகு பாரத பிரதமர் அவர்களோடு மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோர் நேரடியாக உரையாடக்கூடிய –“ பரிச்சைக்கு பயமேன் 2021” நிகழ்ச்சி 4ம் முறையாக 2021 மார்ச் மாதம் 3ம் வாரம் கோவிட் -19 க்கான வழிகாட்டு நெறிமுறைகளையொட்டி இணையவழியில் நடைபெறவுள்ளது. இந்நிகழ்வானது மத்திய கல்வி அமைச்சகத்தின் பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறையால் கடந்தமூன்றாடுகளாக  வெற்றிகரமாக நடத்தப்பட்டுவருகிறது. இந்நிகழ்வினை அனைத்துப் பள்ளித் தலைமையாசிரியர்களும் கீழ் குறிப்பிட்டுள்ள இயக்குநரின் செயல்முறைகளுக்கு இணங்க கட்டுரைப்போட்டி நடத்தி பங்குபெற்ற மாணவர்களின் கட்டுரைகளை மாவட்ட மற்றும் மாநில அளவில் தேர்வுக்குழு அமைத்து நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாணவர்களை தெரிவு செய்தல் சார்பாக இணைப்பில்  செயல்முறைகளை பதிவிறக்கம் செய்து தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிர்யர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE PROCEEDINGS OF THE DSE

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்