நினைவூட்டு-1 -தேர்வுகள் –வேலூர் மாவட்டம் –மார்ச் /ஏப்ரல் -2024 இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் –செய்முறை  தேர்வுகள் மற்றும் தேர்வுப்  பணிகள் மேற்கொள்வது  தொடர்பாக அனைத்து  ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர்/முதல்வர்) மற்றும் அலுவலகப் பணியாளர்களின் விவரங்கள்- இணைப்பில் காணும் Google Forms –ல்  பதிவுகள் மேற்கொள்ளுதல் –சார்பு

மேற்காணும் பொருள் சார்ந்து  நடைபெறவிருக்கும் மார்ச் /ஏப்ரல் -2024  இடைநிலை /மேல்நிலை  பொதுத்தேர்வுகள் தொடர்பாக 2023-2024 ஆம் கல்வியாண்டில்       30.10.2023 அன்றைய நிலவரப்படி வேலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு /நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவி உயர் , மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள்(தலைமை ஆசிரியர் /முதல்வர் ) மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்களை இணைப்பில் காணும் GOOGLE FORMS- ல் உள்ளீடு செய்யுமாறு அனைத்து அரசு / நகரவை /அதிதிராவிடப்பள்ளி /நிதியுதவிப் உயர் மேல்நிலைப்பள்ளி மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் 10.11.2023 நாளிட்ட செயல்முறைகளின் படி தெரிவிக்கப்பட்டது.

எனினும் இதுநாள் வரை இணைப்பில் காணும் பள்ளித்தலைமையாசிரியர்கள் /மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் விவரங்களை சமர்பிக்கப்படாமல் உள்ளது வருந்தத்தக்க செயலாகும். எனவே சார்ந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் விளக்க கடிதத்துடன் நாளை 24.11.2023 க்குள் இவ்வலுவலக ஆ4 பிரிவில் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது .

https://forms.gle/G5kA2PnqWJ6DjNmdA

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர் .