நினைவூட்டு – //அவசரம்//   அனைத்து அரசு/அரசுநிதியுதவி  உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு  

 மேல்நிலை இரண்டாமாண்டு  மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்களின் விவரங்களை மேலே உள்ள google Sheet-ல் பதிவிடும் படி 26.07.2023 அன்று பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. எனினும் இதுநாள் வரை ஒருசில பள்ளிகள் இன்றைய 28.07.2023 பிற்பகல் 2.00 மணி   நிலவரப்படி  பதிவுகள் மேற்கொள்ளவில்லை.

https://docs.google.com/spreadsheets/d/1g264xZe0EZSBJ6wCoOkX4kjLF5S43gPMOHWYV7QWbAA/edit?usp=sharing

மேலும் இன்று 28.07.2023 மேல்நிலை முதலாமாண்டு ஜூன்/ஜூலை -2023 துணைத் தேர்வு  தேர்ச்சி முடிவுகள்  வெளியாகியுள்ள நிலையில்  , துணைத்தேர்வில் தேர்ச்சி  பெற்ற மாணவர்களின் விவரம்  இத்துடன் இணைக்கப்பட்டுள்ள Google Sheet -ல்  இன்று (28.07.2023) மாலை 5.00 மணிக்குள் பதிவுகள் மேற்கொள்ள சார்ந்த பள்ளித் தலைமையாசிரியர்கள் மீள தெரிவிக்கப்படுகிறது.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து அரசு /நகரவை /ஆதிதிராவிடர் நல /நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை /தனியார் ) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு