நவம்பர் 14 ஆம் நாள் ஜவஹர்வால் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நவம்பர் 12 ஆம் தேதி பேச்சுப் போட்டிகள் நடத்துதல் சார்பு.

அனைத்து வகை உயர் / மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,

தமிழ் வளர்ச்சி துறையின் 2021 – 2022ஆம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையின் அறிவிப்பிற்கிணங்க “நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்தநாளில் போட்டிகள் நடத்துதல் சார்பாக தெரிவிக்கப்பட்டதற்கிணங்க நவம்பர் 12ஆம் தேதி அன்று பள்ளியளவில் பேச்சுப் போட்டிகள் நடத்தி மாவட்ட அளவில் பங்குபெற அனுப்பிவைக்க பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்