தேர்வுகள் – 6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறவுள்ள அரசு தேர்வுகளுக்கான வினாத்தாட்களை அந்தந்த ஒன்றியத்திற்குட்பட்ட வினாத்தாள் கட்டுக்காப்பு மையங்களில் பெற்றுக் கொள்ள தெரிவித்தல் – தொடர்பாக.

6 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை நடைபெறவுள்ள அரசு தேர்வுகளுக்குரிய வினாத்தாட்ளை வினாத்தாள் கட்டுக்காப்பு மையத்தில் (Custodian point) ல் ( தேர்வு நடைபெறும் நாட்களின் ) 05.05.2022 முதல் வினாத்தாளினை முகப்புக் கடிதத்தினை வழங்கி பெற்றுச் செல்லுமாறு அனைத்து வகை அரசு /அரசு உதவிபெறும் / நகரவை / மெட்ரிக் பள்ளிகள் தெரிவிக்கப்படுகிறது.

மேற்காண் பொருள் தொடர்பாக எவ்வித புகாருக்கும் இடமளிக்கா வண்ணம் செயல்படுமாறு அறிவுறுத்தப்படுகிறது, மேலும் புகார் ஏதேனும் கண்டறியப்பட்டால் சார்ந்த பள்ளி தலைமைஆசிரியர் மீது துறை சார்ந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது,

//ஒப்பம்//

//க.முனுசாமி//

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள் / முதல்வர்கள்

அரசு/ அரசு உதவிபெறும் பள்ளிகள் / நகரவை/ மெட்ரிக் / பள்ளிகள்

உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர் மாவட்டம்.

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலருக்கு தகவலுடககாகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது,