தேர்வுகள் அவசரம்- ஒருங்கிணந்த மாவட்டம் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுதாத தேர்வர்களின் முகப்புத் தாட்களை பதிவிறக்கம் செய்திட தெரிவித்தல்-சார்பாக.

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு.

தேர்வுகள் அவசரம்- ஒருங்கிணந்த மாவட்டம் மேல்நிலை இரண்டாமாண்டு பொதுத் தேர்வு மார்ச் 2020 24.03.2020 அன்று நடைபெற்ற தேர்வினை எழுதாத தேர்வர்களின் முகப்புத் தாட்களை பதிவிறக்கம் செய்திட சென்னை-6 ,அரசுத் தேர்வுகள் இயக்குநர் அவர்களின் கடிதத்தினை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. சார்ந்த தலைமைஆசிரியர்கள் தங்கள் பள்ளியின் மேற்குறிப்பிட்டுள்ள தேதியில் வருகைப் புரியாத தேர்வர்களின் முகப்புத் தாட்களை கீழ்க்காணும் கடிதத்தில் தெரிவித்துள்ள  அறிவுரைகளின் படி பதிவிறக்கம் செய்ய  அறிவுறுத்தப்படுகிறது.

CLICK HERE TO DOWNLOAD THE DGE LETTER 

முதன்மைக் கல்வி அலுவலர்,வேலூர்

பெறுநர்

அனைத்து மேல்நிலை பள்ளி தலைமைஆசிரியர்கள்/ மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

திருப்பத்தூர்,இராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காக கனிவுடன் அனுப்பலாகிறது.

அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.