சார்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு,
தேசிய பசுமைப்படை சுற்றுச்சூழல் மன்ற பள்ளிகளுக்கு 2018 -2019 ஆம் கல்வி ஆண்டிற்கான மானியத் தொகை ECS மூலமாக விடுவிக்கப்பட்டது. மானியத் தொகை விடுவிக்கப்பட்ட பள்ளிகள் செலவினம் மேற்கொண்டமைக்கான பயனீட்டுச் சான்று 3 அசல் பிரதிகள் மற்றும் இக்கல்வியாண்டில் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றுச்சூழல் செயல்பாடுகள் தொடர்பான விவரங்கள், புகைப்படங்களை தயார் செய்து ஒப்படைக்கத் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தெரிவிக்கப்பட்டும் பயனீட்டுச் சான்று, புகைப்படங்கள் ஒப்படைக்காத இணைப்பிலுள்ள பள்ளிகள் 11.04.2019 அன்று காலை 11.00 மணிக்குள் இவ்வலுவலக ‘இ3’ பிரிவில் நேரில் ஒப்படைக்கும்படி சார்ந்த பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
CLICK HERE TO DOWNLOAD THE PENDING SCHOOL LIST
CLICK HERE TO DOWNLOAD THE UTILISATION CERTIFICATE
முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்.