ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள் சார்பான அறிவுரைகள்

அனைத்து அரசு/நகராட்சி/ நிதியுதவி/ வனத்துறை/நலத்துறை பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் தலைமையாசிரியர்கள் மற்றும் அமைச்சுப்பணியாளர்கள் பள்ளிக்கு வருகைபுரிந்து மேற்கொள்ள வேண்டிய பணிகள்

  1. 6 முதல் 9ம் வகுப்பு வரை மாணவர் தேர்வு முடிவுகள் 24.04.2019 அன்று சார்ந்த மாவட்டக்கல்வி அலுவலரிடம் ஒப்படைத்து, ஒப்புதல் பெற்று 26.04.2019 அன்று பள்ளி தகவல் பலகையில் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும்.
  1. 12, 10, 11 ஆகிய பொதுத்தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படும்போது மாணவர்களுக்கு தெரியப்படுத்துதல்.
  2. பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை சார்ந்த மாணவர்கள் உடனடித்தேர்வு எழுத அரசுத் தேர்வுத்துறை வழங்கும் அறிவிப்பின்படி உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
  3. மாற்றுச்சான்றிதழ்கள்/ மதிப்பெண் சான்றிதழ் கோரி வரும் மாணவர்களுக்கு உடனுக்குடன் வழங்க ஏற்பாடு செய்தல்.
  4. 2019-20 கல்வியாண்டிற்கான புதிய பாடப்புத்தகங்களை மாவட்டக்கல்வி அலுவலர் மூலம் பெற்று வகுப்புவாரியாக பிரித்து பள்ளிகள் திறக்கும் நாளன்று வழங்க ஏற்பாடு செய்தல்.
  5. தங்கள் பள்ளியில் புதிய மாணவர்களின் சேர்க்கை/ தேர்ச்சி/ வேறு பள்ளிக்கு மாற்றம்/ நீக்கம் ஆகிய அன்றாடப் பணிகளை கல்வி தகவல் மேலாண்மை இணையதளத்தில் ( EMIS) உள்ளீடு செய்து பராமரித்தல்.
  6. புதிய மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அறிவிப்பு பலகை வைத்தல்.
  7. நாள்தோறும் edwizevellore.com இணையதளத்தை பார்த்து அனுப்பப்படும் சுற்றறிக்கையை பதிவிறக்கம் செய்து Mail Register-ல் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
  8. பள்ளி கட்டிட மராமத்து பணிகள் ஏதேனும் இருப்பின் பெற்றோர் ஆசிரியர் கழகத்துடன் இணைந்து மேற்கொள்ளுதல்.

தலைமையாசிரியர் ஓரிரு நாட்கள் விடுப்பு எடுக்க நேரிடின்  அடுத்த நிலையில் உள்ள பொறுப்பான ஆசிரியர் அந்த நாட்களில் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

 

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.