ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு 2019-ல் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதால் பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலேயே மீளவும் மாறுதல் வழங்கப்பட்ட விவரம் கோருதல் -தொடர்பாக

அனைத்து உயர்/மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு

வேலூர் மாவட்டத்தில் ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பு 2019-ல் நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டதால் பணிமாறுதல் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அவர்கள் ஏற்கெனவே பணிபுரிந்த இடத்திலேயே மீளவும் மாறுதல் வழங்கப்பட்ட விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து பள்ளித்தலைமையாசிரியர் கையொப்பத்துடன் நாளை பிற்பகல் 2.௦௦மணிக்குள் சமர்பிக்க தெரிவிக்கப்படுகிறது.

ஓம்.செ.மணிமொழி

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை) அவர்களுக்கு தொடர்நடவடிக்கையின் பொருட்டு