ஜனவரி – 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்க காலஆவகாசம் வழங்குதல் – சார்பு.

ஜனவரி – 2022-ல் நடைபெறும் NTSE தேர்விற்கு விண்ணப்பிக்கும் தேர்வர்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களை தலைமையாசிரியர்கள் பதிவேற்றம் செய்ய 12.11.2021 முதல் 27.11.2021 வரை பதிவேற்றம் செய்யலாம் என்ற விவரம் தெரிவிக்கப்பட்டிருந்தது தற்பொழுது தொடர் மழையின் காரணமாக பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் 30.11.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது மேலும் எக்காரணம் கொண்டும் கால அவகசாம் நீட்டிக்கப்படமாட்டாது என்பதை அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை/மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்திரா வித்யாலயா ஆகிய பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது. பதிவேற்றம் செய்யப்பட்டதை அனைத்து வகை பள்ளித் தலைமையாசிரியர்களும் உறுதி செய்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக் கல்வி அலுவலர்,

வேலூர்.

பெறுநர்,

அனைத்து வகை உயர்நிலை / மேல்நிலை/மெட்ரிக் / CBSE / ஆங்கிலோ இந்தியன் / கேந்திரா வித்யாலயா ஆகிய பள்ளித் தலைமையாசிரியர்கள்.

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர்,

வேலூர்.

(தகவலுக்காகவும், தக்க தொடர் நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டும்.)