கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சார்பான விழிப்புணர்வு

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது சார்பான விழிப்புணர்வு

தற்போது கொரோனா 2வது அலை வேகமாக பரவிவரும் சூழ்நிலையில் உயிர் இழப்புகளை தவிர்க்கும்பொருட்டு அரசு 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. எனவே, 45 வயதிற்கு மேற்பட்ட அரசு ஊழியர்கள் அனைவரும் கண்டிப்பாக தடுப்பூசி போட்டுக்கொண்டு தங்களை காத்துக்கொள்ள விழிப்புணர்வு ஏற்படுத்தி தக்க நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துவகை தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            மற்றும், 18 வயதிற்கு மேற்பட்ட குடும்ப அங்கத்தினர்களையும் Online-ல் பதிவு செய்து தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அனைத்து அரசு பணியாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            அரசால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கள் ஆகியவற்றை பின்பற்றி தாங்களும் தங்கள் குடும்பத்தினரும் பாதுகாப்புடன் இருக்க இதன்மூலம் அறிவுறுத்தப்படுகிறார்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.