எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2022 – தேர்வுக்கூட அனுமதி சீட்டு பதிவிறக்கம் செய்தல் சார்பு

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கவனத்திற்கு

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வு அக்டோபர் 2022 தேர்வுக்கூட அனுமதி சீட்டு 29-09-2022 முதல் சென்னை அரசுத் தேர்வுகள் இயக்கக www.dge.tn.gov.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம் என்ற செய்திக்குறிப்பு சென்னை அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெறப்பட்டுள்ளது. பெறப்பட்ட செய்திக்குறிப்பு இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. இத்தகவலினை அனைத்து பள்ளியின் தகவல் பலகை மற்றும் சுற்றறிக்கை மூலமாக அனைத்து மாணவர்களுக்கம், ஆசிரியர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்குமாறு அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலூர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர்நடவடிக்கைக்காகவும் அனுப்பலாகிறது.