உள்ளாட்சித் தேர்தல் – 2021 – ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் படிவங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து பெற்று மீள ஒப்படைத்தல் சார்பு

அனைத்து உயர், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள் கவனத்திற்கு

உள்ளாட்சித் தேர்தல் 2021 தொடர்பாக வாக்குச்சாவடிகளில் பணிபுரிய ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாதோர் விவரங்கள் அடங்கிய படிவங்கள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தில் அ1 பிரிவு எழுத்தரிடம் 06-09-2021 அன்று காலை பெற்றுக்கொண்டு சார்ந்த ஆசிரியர்களிடமிருந்து படிவத்தில் கையொப்பம் மற்றும் புகைப்படம் ஒட்டி அன்று மாலை 03.00 மணிக்குள் வேலுர் மாவட்டக் கல்வி அலுவலகத்தின் அ1 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்குமாறு அனைத்து உயர் , மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் வட்டாரக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இத்துடன் மாவட்டக் கல்விஅலுவலரின் சிக்கன தந்தி இணைக்கப்பட்டுள்ளது.

முதன்மைக் கல்வி அலுவலர் வேலுர்

பெறுநர்

அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் , அனைத்து வட்டாரக் கல்வி அலுவலகர்கள்