உயர் தொழில்நுட்ப ஆய்வகம்- வினாடி வினா

அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களின் கனிவான கவனத்திற்கு

ஆகஸ்ட் 2023 மாதத்திற்கான வினாடி வினா – உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் நடைபெற உள்ளது.

16.08.2023 முதல் 29.08.2023 வரை நடைபெறும் வினாடி வினா தேர்வில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளி மாணவர்களும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது

மேலும் உயர் தொழில்நுட்ப ஆய்வகம் மூலம் வினாடி வினா நடைபெற இணைப்பில் உள்ள வழிகாட்டி நெறிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்படுகிறது

// ஒப்பம் //

// செ.மணிமொழி //

முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர் மாவட்டம்

பெறுநர்

தலைமைஆசிரியர்கள்

அனைத்து அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்

வேலூர்.