அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ள மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு விவரம் 25-02-2021 மாலை 03.00 மணிக்குள் ஒப்படைக்க கோருதல்

தேர்வுகள் மிக அவசரம் மற்றும் தனி கவனம்

நினைவூட்டு 2

அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளி  தலைமை ஆசிரியர்கள்  கவனத்திற்கு

தங்கள் பள்ளியிலுள்ள  மேல்நிலைக் கல்வி பாடத் தொகுப்பு  மற்றும் சுயநிதி பாடத் தொகுப்பு விவரம் 22-02-2021 அன்றுக்குள் வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க தொவிக்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை எந்த வொரு பள்ளிகளும் விவரங்கள் ஒப்படைக்கப்படவில்லை மிகவும் வருந்ததக்க செயலாகும்.

மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தனித்தனியாக பாடத்தொகுப்பு விவரங்கள் உரிய படிவத்தில் பூர்த்தி செய்து  25-02-2021  இன்று மாலை 3 மணிக்குள்   வேலுர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக  பி 4 பிரிவு எழுத்தரிடம் உடன் ஒப்படைக்கப்படவேண்டும் என  அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்   கேட்டுக்கொள்ளப்படுகிறாகள்.

முக்கிய குறிப்பு

கீழ்க்குறிப்பிட்டுள்ள  அலைபேசியினை  உடன் தொடர்பு கொண்டு தங்கள் பள்ளியில் உள்ள மேல்நிலை பாடத் தொகுப்பு  (Group Code) விவரத்தினை உடன் தெரிவிக்குமாறு அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள்   தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

9442273554  /  7868015820

 

இணைப்பு

New doc 25-Feb-2021 1.19 pm

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலுர்

பெறுநர்

அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகள், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் சுயநிதிப்பள்ளிகளில்  தலைமை ஆசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி  முதல்வர்கள்

நகல்

மாவட்டக் கல்வி அலுவலர் வேலுர் அவர்களுக்கு தகவலுக்காகவும் தொடர் நடவடிக்கைக்ககாவும் அனுப்பலாகிறது.