அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள் – 10ம் வகுப்பு தேர்ச்சி சதவீத்ம் அதிகரிக்க அறிவுரைகள்

அனைத்து அரசு/ அரசு நிதியுதவி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்/ பாட ஆசிரியர்கள்,

எஸ்.எஸ்.எல்.சி. பிப்ரவரி 2020 மாதிரி பொதுத்தேர்வு தேர்வு பகுப்பாய்வு பள்ளிவாரியாக, பாடவாரியாக ஆய்வு செய்ததில் பல பள்ளிகளில் சிறப்பான தேர்ச்சி விகிதத்தை பெரும்பான்மையான ஆசிரியர்கள் அளித்துள்ளதற்கு பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், சில  மாணவர்கள் 25 மதிப்பெண்களுக்கு குறைவில்லாமலும் 35 மதிப்பெண்களுக்கு குறைவாகவும் பெற்றுள்ளனர். இம்மாணவர்களுக்கு அவரவர்கள் தேர்ச்சி பெறாத பாடங்களில் சிறப்பு பயிற்சியினை சார்ந்த பாட ஆசிரியர்கள் போர்கால அடிப்படையில் தனி கவனம் செலுத்தி மேற்கொள்ளப்படவேண்டும். 10ம் வகுப்பிற்கு அனைத்து பாடங்களுக்கும் போதிய ஆசிரியர்கள் உள்ள நிலையில், தங்கள் பாடங்களில் முழு தேர்ச்சி விகிதத்தை அளிக்க ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விடுப்பில் உள்ள மாணவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வருகைபுரியாமல் உள்ள மாணவர்களின் பெற்றோர்களை தொடர்புகொண்டு மாணவர்களை தொடர்ந்து  பள்ளிக்கு வருகைபுரிவதை உறுதி செய்யுமாறும், 10.03.2020 முதல் நடைபெறும் 2வது மாதிரி பொதுத்தேர்வினை அனைத்து மாணவர்களும் சிறப்பாக எழுதிட தன்னம்பிக்கை அளிக்கக்கூடிய வகையில் மாணவர்களை ஊக்கப்படுத்துமாறும், தேர்வு முடிந்தவுடன் விடைத்தாட்களை மதிப்பீடு செய்து மாணவர்களுக்கு வழங்க பாட ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி சதவீதம் அதிகரித்தால் மட்டுமே பள்ளியின் தேர்ச்சி அதிகரிக்கும் என்பதால் அனைத்து பாட ஆசிரியர்களும் ஒருங்கிணைப்போடு செயல்பட்டு தங்களிடம் படிக்கும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சிபெற செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி தலைமையாசிரியர்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை கூர்ந்தாய்வு செய்து தங்கள் பள்ளியின் பாட ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணித்தும், உரிய ஆலோசனைகளை வழங்குமாறும் மற்றும்  பெற்றோர்களுக்கு தங்கள் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம், பொதுத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவித்து தங்கள் பள்ளியின் தேர்ச்சி சதவீதத்தினை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

CLICK HERE TO DOWNLOAD THE SCHOOLWISE  RESULT

CLICK HERE TO DOWNLOAD THE RESULT COMPARISION

CLICK HERE TO DOWNLOAD THE SUBJECTWISE ABOVE 20 MARKS SCORED STUDENTS LIST

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்.