அனைத்து அரசு/அரசு நிதியுதவி/ மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் கட்டிடம், கழிவறை, நீர்த்தேக்கத்தொட்டி ஆகியவற்றை தினமும் ஆய்வு மேற்கொள்ள தலைமையாசிரியர்/ முதல்வர்களுக்கு தெரிவித்தல்

            அனைத்து அரசு/அரசு நிதியுதவி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸி.இ. பள்ளிகளின் முதல்வர்களுக்கு,

            பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துவகை கட்டிடங்கள், கழிவறைகள்  நீர்த்தேக்கத் தொட்டிகளை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பார்வையிட்டு அதன் தன்மையினை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

/மிகவும் அவசரம்/தனிகவனம்/

தலைமையாசிரியர்கள் தினமும் பள்ளிகளில் தவறாமல் பார்வையிட வேண்டிய விவரங்கள்

            அனைத்து அரசு/அரசு நிதியுதவி/ சுயநிதி பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் மெட்ரிக்/ சி.பி.எஸி.இ. பள்ளிகளின் முதல்வர்களுக்கு,

            பள்ளி வளாகத்தில் உள்ள அனைத்துவகை கட்டிடங்கள், கழிவறைகள்  நீர்த்தேக்கத் தொட்டிகளை தினமும் காலை மாலை இரண்டு வேளையும் பார்வையிட்டு அதன் தன்மையினை உறுதி செய்யும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            பழுதடைந்த கட்டிடங்கள், கழிவறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளவும் அவற்றின் அருகில் மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் பொருட்டு தகுந்த நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

            மேலும், சத்துணவு கூடங்களை ஆய்வு செய்து, சத்துணவு கூடத்தில் சமைக்கப்பயன்படும் பாத்திரங்கள், தண்ணீர் ஆகியவை சுத்தமாக  உள்ளதா என்பதையும், மேற்கூரை மற்றும் தரை சுத்தமாக உள்ளதா என்பதை  தினமும் உறுதிபடுத்த தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்