TO ALL HMs/PRINCIPALS -பள்ளிகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றிட தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்களுக்கு,

பள்ளிகளில் 9, 10,11 மற்றும் 12ம் வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் நலன் கருதி தொற்று பரவாமல் இருப்பதற்காக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கியுள்ளது. அதனை தவறாமல் பயன்படுத்திக்கொள்ள  அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்/ மெட்ரிக் முதல்வர்கள்.

  1. அருகில் உள்ள பொது சுகாதார நிலைய மருத்துவர், வட்டார மருத்துவஅலுவலரின் கைபேசி எண்களை தலைமையாசிரியர் வைத்திருக்க வேண்டும்.
  2. மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் அனைவரும் முகவசத்துடன் வருகைபுரிய வேண்டும்.
  3. தினமும் சோப்பினால் கைகளை கழுவியபின்பு, கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய நடவடிக்கை வேண்டும்.
  4. தினமும் மாணவர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து பதிவேடுகளில் பராமரிக்கப்படவேண்டும்.
  5. மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் எவருக்கேனும் நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சார்ந்த மருத்துவரை அனுக வேண்டும்.
  6. மாணவர்கள் வழிகாட்டு நெறிமுறைகளில் தெரிவித்துள்ளவாறு 6 அடி இடைவெளியில் ஒரு அறைக்கு 20 மாணவர்கள் மட்டுமே அமரவைத்து வகுப்புகள் செயல்பட வேண்டும்.
  7. மாணவர்கள் உணவு, தண்ணீரை பரிமாரிக்கொள்வதை தவிர்க்கும் வகையில் ஆசிரியர்களை கொண்டு கண்காணிக்கப்பட வேண்டும்.
  8. சத்துணவு உண்ணும் மாணவர்களை போதிய இடைவெளியில் அமரவைத்து சுகாதாரமான சூழ்நிலை ஏற்படுத்திட வேண்டும்.

                        மேலும் இணைப்பில் உள்ள அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கண்டிப்பாகக செயல்பட வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்