TO
ALL CATEGORIES OF SCHOOL HEADMASTERS/PRINCIPALS,
16.02.2018 அன்று காலை 11.00 மணி முதல் 12.00 மணி வரை மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களிடம் உரையாற்றி மாணவர்கள் தன்னம்பிக்கையோடு தேர்வை எதிர்கொள்ள அறிவுரை வழங்க உள்ளார். இது சார்பாக காணொளிக்காட்சிகள் மூலமாக மாணவர்கள் கண்டு பயன்பெற தொலைகாட்சிப்பெட்டி, கணிணி மற்றும் எல்.சி.டி. , வானொலி , ஸ்மார்ட் வகுப்பறை, ஆன்ட்ராய்டு கைபேசி ஆகிய ஏதேனும் ஒரு ஊடக வசதியை ஏற்படுத்தித்தருமாறு தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ள நிலையில் அனைத்து பாட ஆசிரியர்களும் தலைமையாசிரியரோடு இணைந்து மேற்குறிப்பிட்ட ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்களின் நிகழ்ச்சியில் தங்கள் பள்ளி மாணவர்கள் பார்த்த விவரத்தின் புகைப்படம் ( மூன்று புகைப்படங்கள்) மற்றும் விடியோ பதிவு (3 நிமிடங்களுக்கு மிகாமல்) எடுத்து இவ்வலுவலக மின் அஞ்சல் முகவரிக்கு (velloreceo@gmail.com) அல்லது 9486273764 என்ற எண்ணிற்கு Whatsapp-ல் 16.02.2018 அன்று மாலை 3.00 மணிக்குள் அனுப்பிவைக்குமாறும் மற்றும் இதற்கு உண்டான செலவினங்களை பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிதியிலிருந்து அல்லது RMSA/SSA நிதியிலிருந்து மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்