( நினைவூட்டு )NMMS EXAM தேர்வுகள் சார்பான விவரம் கோருதல் மிக அவசரம் தனி கவனம்

இணைப்பில் காணும் பள்ளிதலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு

மிக அவசரம் // தனிகவனம் //

இத்துடன் இணைக்கப்பட்டுள்ள excel படிவத்தில் உள்ள மாணவர்களின் விவரங்கள் சரியாக உள்ளனவா என கண்டறிந்து திருத்தங்கள் இருப்பின் அல்லது திருத்தங்கள் ஏதுமில்லை என்றால் நாளை 19-07-2022 அன்று காலை 11.00 மணிக்கு உரிய விவரங்கள் வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக ஆ4 பிரிவு எழுத்தரிடம் ஒப்படைக்க உடன் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கீழ்க்காணும் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். திருத்தங்கள் இருப்பின் கீழ்க்காணும் அலைபேசியில் உடன் தொடர்பு கொண்டு விவரங்கள் தெரிவிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குறிப்பு 30-06-2022 அன்று வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் மூலம் விவரங்கள் கோரப்பட்டு இதுநாள் வரை கீழ்க்காணும் பள்ளிகளிலிருந்து விவரங்கள் பெறப்படவில்லை என்பது வருந்ததக்க செயலாகும். மாணவர்களின் கல்வி உதவிதொகை என்பதால் சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ச. சுரேந்தர் பாபு, உதவியாளர் 9442273554 , 9488880036

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

பெறுநர்

விகே விஎம், வேலப்பாடி, திருவள்ளுவர் குடியாத்தம், செயின்ட் மேரிஸ் வேலூர், செயின் ஜோசப் கட்டுப்படி, வெங்கடேஸ்வரா வேலூர், என்கேஎம் சாயிநாதபுரம், தோட்டப்பாளையம், நகரவை குடியாத்தம், சின்னபள்ளிக்குப்பம், ஒடுக்கத்தூர் மகளிர், நெல்லூர்பேட்டை குடியாத்தம் மகளிர், பள்ளிகொண்டா மகளிர், கணியம்பாடி, அணைக்கட்டு மகளிர், அணைக்கட்டு ஆண்கள், கொட்டமிட்டா, ஒடுக்கத்தூர் ஆண்கள், கோவிந்ரெட்டிப்பாளையம், அக்சீலியம் காட்பாடி, தொன்போஸ்கோ காட்பாடி, வடுகந்தாங்கல்