NMMS-2023

2022-2023-ம் கல்வியாண்டில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வு, 25.02.2023 (சனிக்கிழமை) அன்று நடைபெற உள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பங்களைப் ஆன்லைனில்  தலைமை ஆசிரியர்கள் 25.01.2023-க்குள் பதிவேற்றம் செய்யுமாறு தெரிவிக்கப்பட்டது.

எனவே, தங்கள் ஆளுகைக்குட்பபட்ட அரசு பள்ளிகள் / அரசு உதவி பெறும் பள்ளிகள் / மாநகராட்சி / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு  பள்ளித் தலைமை ஆசிரியர்கள்தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகை திட்டத் தேர்வுக்கு அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்க ஊக்குவிக்குமாறு தலைமை ஆசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பங்கள் மற்றும் தேர்வுக்கட்டணம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் 25.01.2023

முதன்மைக் கல்வி அலுவலர்

வேலூர்

பெறுநர்

அனைத்து நடுநிலை,உயர்நிலை, மேல்நிலைபள்ளி மற்றும் நிதியுதவிப்பள்ளி தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்

நகல்

வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்( தொடக்கக்கல்வி/இடைநிலை) தொடர்நடவடிக்கையின் பொருட்டு அனுப்பலாகிறது.