அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கு ,
தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை தேர்வு (NMMS) 25.02.2023 (சனிக்கிழமை) அன்று காலை 9.30 மணி முதல் 11.00 மணி வரை Paper I – MAT மற்றும் முற்பகல்11.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை Paper II SAT தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வர்கள் தேர்வு தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே தேர்வு மையத்திற்கு வருகை புரிய வேண்டும், மேலும் தேர்வு மையத்திற்கு மாணவர்களை பாதுகாப்பாக அழைத்து சென்று வர ஒரு பொறுப்பு ஆசிரியரை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
குறிப்பு: NMMS பெயர் பட்டியலில்(Nominal Roll) தேர்வுக்கட்டணம் செலுத்தவில்லை (Not Paid) என்று தகவல் உள்ள மாணவர்களையும் தேர்வெழுத அனுமதிக்க வேண்டும் என்ற தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இத்துடன் இணைக்கப்பட்டுள்ள நடைமுறையினை பின்பற்றி செயல்பட தேர்வுமைய முதன்மைக்கண்காணிப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
ஓம்.க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்,
வேலூர்.
பெறுநர்
அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்கள்,வேலூர் மாவட்டம்.
நகல்
வேலூர் மாவட்ட கல்வி அலுவலர்(இடைநிலை/தொடக்ககல்வி)தொடர் நடவடிக்கையின் பொருட்டு