அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு
தேசிய வருவாய் மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் தேர்விற்கு நாள்: 25.02.2023 அன்று நடைபெறவுள்ள தேர்வு மையங்கள் மற்றும் இணைப்பு பள்ளிகளின் விவரம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
தேர்வு மையமாக தெரிவு செய்யப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் தேர்வு நடத்துவதற்கான தேர்வெழுத தேவையான அறைகளுடன் கூடிய இருக்கை வசதி, தடையில்லா மின்சாரம் , கழிப்பிட வசதி மற்றும் குடிநீர் வசதி செய்து எவ்வித குறைபாடுகளும் இருக்காவண்ணம் உறுதிசெய்துகொள்ள தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.
ஒப்பம் .க.முனுசாமி
முதன்மைக் கல்வி அலுவலர்
வேலூர்
பெறுநர்
அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள்,வேலூர் மாவட்டம் .
சார்ந்த தேர்வு மைய பள்ளித் தலைமையாசிரியர்கள் வேலூர் மாவட்டம்
நகல்
வேலூர் மாவட்டக் கல்வி அலுவலர் (இடைநிலை/ தொடக்கக்கல்வி) தொடர்நடவடிக்கையின் பொருட்டு