EXAM URGENT -இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடுதல் – விவரங்களை அரசு தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க தெரிவித்தல்

தேர்வுகள் அவசரம் – அனைத்து வகை அரசு/நிதியுதவி/மெட்ரிக் மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கவனத்திற்கு.

இணைப்பில் உள்ள அரசுத்தேர்வுகள் இயக்குநர் அவர்களின் ஆணைப்படி 2020-2021 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களின் 10 வகுப்பு மதிப்பெண்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 25.06.2021 முதல் 30.06.2021 வரை வெளியிடப்படவுள்ளது. அதனை தொடர்ந்து 2020-2021 ஆம் கல்வியாண்டின் +2 பெயர்ப்பட்டியலின் (Nominal Roll)அடிப்படையில் அம்மாணவர்கள் +1 சேர்க்கையின் போது பள்ளியில் சமர்பித்த சான்றிதழ்களை ஒப்பிட்டு சரிபார்த்து தலைமை ஆசிரியரின் சான்றிட்டு அதனை உடன் கல்புதூர் அரசுத்தேர்வுகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் சமர்பிக்க மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்/முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
CEO, VELLORE