E-Box Crash Course இல் பங்கேற்க பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளதை தெரிவித்தல்

அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

நீட் தேர்விற்கு தயாராகும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணாக்கர்களுக்கு ஆன்லைன் மூலம் E-Box Crash Course இல் பங்கேற்க 09.06.2020 வரை பதிவுகள் மேற்கொள்ள தெரிவிக்கப்பட்டது.

15.06.2020 அன்று ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் தொடங்கவுள்ள நிலையில் ஒருசில மாணாக்கர்கள் இதற்கு பதிவு மேற்கொள்ளவில்லை என தெரியவருகிறது.

இதுவரை பதிவு மேற்கொள்ளாத மாணாக்கர்களுக்கென 15.06.2020 வரை பதிவு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

எனவே, நீட் தேர்விற்கு விண்ணப்பித்து, E-Box Crash Course க்கு பதிவு செய்யாத மாணாக்கர்களை உடனடியாக

http://app.eboxcolleges.com/neetregister

என்ற இணையதளத்தில் தவறாமல் பதிவு செய்திட உரிய நடவடிக்கை எடுக்குமாறு சார்ந்த மேல்நிலை பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், ஏற்கனவே E-Box Crash Course க்கு பதிவு செய்த மாணவர்களுக்கு அவர்களின் மின்னஞ்சல் முகவரி / கைப்பேசி எண்ணிற்கு பயிற்சி வகுப்பு குறித்த கீழ்காணும் தகவல் E-Box நிறுவனம் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவரத்தை சார்ந்த மாணவர்களுக்கு தெரிவித்து 15.06.2020 முதல் ஆன்லைன் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள அறிவுறுத்துமாறு  அனைத்து அரசு/ நகரவை/ஆதிதிராவிடர் நல/வனத்துறை/ அரசு நிதியுதவி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக் கல்வி அலுவலர், வேலூர்